IndiaLatest

செய்தியாளர்கள் சந்திப்பு – கல்பற்ற

ஆன்மிக ஒளி பகிர்தலுக்கு சாந்திகிரி குருஸ்தானிய வயநாட்டிற்க்கு

“Manju”

பசுமையான நினைவுகளுடன் வயநாடுக்கான மற்றொரு யாத்திரை

வயநாடு : ஆன்மிக பாதையில் பக்தர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்கவும், நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் யாத்திரை நினைவுகளை மீண்டும் நினைவு கூறவும் குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அமிர்த ஞான தபஸ்வினி, வயநாடு வருகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா வயநாட்டை அடையும் போது, ​​அது குரு பக்தர்களுக்கு ஆன்ம நிறைவும் மற்றும் அர்ப்பணிப்பு காலங்களின் பலனும் கிடைக்கப்பெறும் அனுபவவுமாகும். கடந்த ஜூன் 2005 இல் சிஷ்ய பூஜிதா இதே இடத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

சாந்திகிரி ஆசிரமத்தின் வார்த்தைகளும் வழியும் சிஷ்ய பூஜிதாதான். அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே சிஷ்ய பூஜிதா திருவனந்தபுரம் போத்தன்கோட் சாந்திகிரி ஆசிரம வளாகம் விட்டு வெளியே யாத்திரைகள் மேற்கொள்கிறார். திருவனந்தபுரம் போத்தன்கோட் சாந்திகிரி ஆசிரமத்திற்கு தினமும் வருகை தரும் ஆயிரக்கணக்கான குருபக்தர்களுக்கு ஆன்மீக ஆறுதல் அளிக்கும் சிஷ்ய பூஜிதா வணக்கத்திற்குரியவராக குருஸ்தானியராக விளங்குகிறார்.

குருவின் யாத்திரை நாட்டிற்கு புண்ணியம் தரும் என்பது குரு பக்தர்களின் அனுபவம். வழிபாட்டு தலங்கள் அல்லது முனிவர்கள் தவம் செய்த இடங்கள், மகான்கள் பிறந்த இடம் அல்லது சமாதி ஸ்தலங்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட தலங்களுக்கு யாத்திரை செய்வது சிறப்புக்கு உரியது .

குருவின் பலபிறப்புகளாக தொடர்பு கொண்ட கர்மபூமியான வயநாடும் மற்றும் . சுல்தான்பத்தேரி அருகிலுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களும் இந்த புனித யாத்திரை மூலம் சிஷ்ய பூஜிதாவை தரிசிக்கும் அரும் வாய்ப்பு கிடைக்கப் பெறுகின்றனர்.

ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி மற்றும் சுமார் 100 துறவிகள் அவருடன் புனித யாத்திரையில் சிஷ்ய பூஜிதாவுடன் பயணிக்கிறார்கள். ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய ஆசிரமத்தில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் அடைந்து யாத்திரை குழுவினர் மாலை 6 மணிக்கு சுல்தான் பத்தேரியை சென்றடைவார்கள். நம்பியார்குன்றில் வரும் சிஷ்ய பூஜிதாவை சீடர்களும், சன்னியாசிகளும், குரு பக்தர்களும், உள்ளூர் மக்களும் பூரண கும்பத்துடன் வரவேற்பர். ஆசிரமத்தில் சிஷ்ய பூஜிதா தர்சின மந்திரத்தில் இளைப்பாறுகிறார் .

ஏப்.5ம் தேதி காலை 9 மணிக்கு பிராத்தனை மண்டபத்தில் பிரதிஷ்டா பூர்த்திகரணம் நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பழங்குடியினர் கலைகளின் பின்னணியில், மங்கள நாதங்களின் பின்னணியில் மனதையும் உடலையும் அர்ப்பணித்த நூற்றுக்கணக்கான ஆத்ம உறவினர்களிலிருந்து எழும் தொடர் அகண்ட நாம பிரார்த்தனையின் சூழலில் இந்த அர்ப்பணிப்பு நடைபெறுகிறது. பிறகு குருதரிசனம். ஆசிரம விழாக்களுக்குப் பிறகு நடக்கும் கலாச்சார நட்புறவு கூட்டத்தில் அரசியல், சமூக, கலாசாரத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள். விழாவில் ஏழை பழங்குடியின குடும்பங்களுக்கு அன்றாட தேவைகளுக்கு உண்டான பொருட்கள் வழங்கப்படும்.

மாலை 4 மணிக்கு நடைபெறும் மாநாட்டில் பல்வேறு துறைகளில் தங்கள் மேலார்ந்த திறமையை வெளிப்படுத்திய 50 நபர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தீபபிரதக்ஷிணை. இரவு 8 மணிக்கு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் திருவிழாவாக மியூசிக் ஃப்யூஷன், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
சுல்தான்பத்தேரி ஆசிரமத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களுக்குப் பிறகு, ஏப்ரல் 7ஆம் தேதி பக்தர்கள் கோழிக்கோட்டில் உள்ள கக்கோடி கிளை ஆசிரமத்துக்குச் செல்கின்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் சுவாமி ஜெயதீப்தன் ஞான தபஸ்வி, சுவாமி பக்ததன் ஞான தபஸ்வி, தகவல் தொடர்பு பிரிவு கௌரவ ஆசிரியர் டி. சசிமோகன், உதவிப் பொது மேலாளர் சேதுநாத் மலையாளப்புழா, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பி.கே.ஜெயராஜன், அட்வ.பி. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button