IndiaLatest

சாமூதிரியின் நாட்டில் சாந்திகிரியின் விஸ்வஞானமண்டபத்தில் தீபம் ஏற்றப் படுகிறது

“Manju”

 

கக்கோடி: நட்புணர்வின் சகோதரத்துவத்தின் சாமூதிரிநாட்டில்(-கோழிக்கோட்டில் ) சாந்திகிரியின் மற்றொரு விஸ்மய அழகிய மாமண்டபம் சமர்ப்பிக்கப்படுகிறது. கோழிக்கோடு கக்கோடி ஆனாவ்குன்றில் இதழ் விரியும் அழகுமண்டபத்திற்கு விசுவஞானமண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது . வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி ஆசிரமம் குருஸ்தானிய சிஷ்ய பூஜித அமிர்த ஞான தபஸ்வினி அவர்களால் தீபம் ஏற்றப்பட்டு நாட்டிற்க்காக அர்பணிக்கப்படுகிறது ..
1995 டிசம்பரில் குருவின் அறிவுறுத்தலின்படி வெறிச்சோடிக்கிடந்த ஆனாவ் என்ற குன்றின் மேல்பகுதியில் பதிமூன்ற ஏக்கர் இடம் குருபக்தர்களின் முயற்சியில் வாங்கப்பட்டது. வெறுமனே கிடந்த பூமியில் முதல்கட்டத்தில் மரக்கன்றுகளும் பழச்செடிகளும் நட்டு வளர்த்தனர் . 2005ல் சிஷ்ய பூஜிதாவின் வருகைவேளையில் ஒரு தற்காலிக கட்டிடத்தில் தீபம் ஏற்றி வைக்கப் பட்டது.

2014 ஜனவரி 5 ஆம் தேதி புனித பயணத்தில் சிஷ்யபூஜித பிரார்த்தனை ஆலயத்தின் . செங்குத்தாய குன்றின் அமைப்பு அவ்வளவு எளிதாக யாரும் சென்றுஅடைய இயலமல் சிரமம் மிக்கதாக இருந்தது . 2015 மே 1 முதல் இன்றுவரை குழந்தைகள் முதல் வயதானவர்கள் அடங்கிய குருபக்தர்களின் கையும் மெய்யும் மறந்து செயல்பாடு மற்றும் ஆத்மாசமர்ப்பணத்தின் நிறைவில் இன்று விசுவஞானமண்டபம் நாட்டிற்காக சமர்ப்பிக்கப்படுகிறது.
72 அடி உயரத்தில் ஒவ்வொரு தளத்திலும் 12 வீதம் 36 இதழ்களுள்ள முழுமையாய் விரிந்த தோற்றம் உள்ள தாமரை சிற்பம். உள்ளே விஸ்மயமான 22 தூண்களுடன் நிற்கும் சிற்ப சாதுரண்யம். மூன்று தளங்களுடன் தலையெடுப்புடன் நிற்கும் ஆன்மீக மண்டபம் . கீழ்தளத்தின் நடுப்பகுதியில் நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் வண்ண சித்திரம் பிரதிஷ்டை . பிரபல ஓவியர் ஜோசப் ரோக்கி பாலக்கல் கைவண்ணத்தில் வரையப்பட்ட ஒவியம் . இந்த மண்டபத்தின் மேலே உள்ள தலங்களில் குரு பயன்படுத்திய பொருட்களின் அருங்காட்சியகம் அமைந்துள்ளது .

ஆலப்புழாவைச் சேர்ந்த விக்டர் பயலி தான் இதன் கருத்து வடிவமைப்பு நிர்வகித்தவர். மண்டபத்தின் ஒளி வடிவமைப்பு புகழ்பெற்ற கேமராமேன் எஸ். குமார் . இவர்தான் தாமரபர்ணசாலையின் ஒளி வடிவமைப்பும் அமைத்தவர் . இந்த மண்டபத்தின் எல்லா பணிகளிலும் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் மற்றும் சிற்பி ராஜீவ் அஞ்சலின் மேற்பார்வையும் உண்டாயிருந்தது. இந்த மண்டபத்தின் கட்டுமான பணிகள் கே . சுகேசன் பொது மேற்பார்வையில் ஹரிதாசன் பி கே , சஜித் கொயிலாண்டி , அருண் டி பி , ரவி மன்னராத் போன்றவர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. பிரவீன் புத்தன்பறம்பில் நில அமைப்பு வடிவமைத்தார்.

குன்றின் மேல் அமைந்த இந்த மாளிகையும் அதன் சுற்று முள்ள இயற்கை பொலிவும் விவரிக்க இயலாத வானக்காட்சிகளும் வரும் நாட்களில் கோழிக்கோட்டின் மனதில் இடம்பிடிக்கும். ஜாதிமத மற்றும் அனைத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கே இணைந்து நிற்கும் தலம் என்பது மற்றொரு தனிச்சிறப்பு. விஸ்வஞானமண்டபத்தின் சமர்ப்பணம் வரும் நாட்களில் எல்லா விதத்திலும் நாட்டின் திருவிழாவாக கொண்டாடப்படும் . ஏப்ரல் 2 ம் தேதி கோழிக்கோட்டின் கடற்கரையில் இசை விருந்து படைத்தும் 3ம் தேதி ப்ரீடம் ஸ்க்வயரில் வண்ணக்கோலம் படைத்தும் சாந்திகிரியின் விசுவஞான ஆலயம் சமர்ப்பணத்தின் விழா கோலம் பூண்டும் . 4 ம் தேதி இஃப்தார் விருந்து, 5 ம் தேதி கவியரங்கம், 6 ம் தேதி கலாஞலி, 7 ம் தேதி வரவேற்பு , 8 ம் தேதி மெகாமெடிக்கல் முகாம் என தொடங்கி பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கும், ஜீவகாருண்யப்பணிகளும் கோழிக்கோட்டின் நகரத்தில் நடைபெறும்.

ஏப்ரல் 7 ம் தேதி கக்கோடியில் வரும் சிஷ்யபூஜிதயை துறவிகளும் குருபக்தர்களும் சேர்ந்து பூர்ண கும்பம் சம்பிரதாயங்களுடன் வரவேற்று . 9 ம் தேதி அன்று விசுவஞானமண்டபத்தின் தீபம் ஏற்றி . 10 அன்று தீர்த்தயாத்திரை சங்கம் திருவனந்தபுரத்திற்கு திரும்புவார்கள் . ஏப்ரல் 2 முதல் 9 வரை நடைபெறும் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அரசியல் சமூக ஆன்மீக கலை-கலாச்சார துறைகளின் முக்கிய பிரபலங்கள் பங்கு பெறுகின்றனர்.

Related Articles

Back to top button