IndiaLatest

டாக்டர் ஜெகந்நாதன் புதிய தேசிய சித்தா வாரியம் தலைவர்

“Manju”

புது தில்லி: இந்திய மருத்துவ துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய இந்திய மருத்துவ கமிஷனின் சித்தா வாரியத்தின் தலைவராக டாக்டர் ஜெகந்நாதன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் புதிய கொள்கையின் அடிப்படையில் முந்தைய இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் ஆளுநராக இருந்த வைத்தியா ஜெயந் யஸ்வந் தேஜோபூஜாரி அவர்கள் தற்போதைய இந்திய மருத்துவ தேசிய கமிஷனின் தலைமை (சேர்பெர்சன்) பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த கமிஷனின் பாகமாக நான்கு புதிய வாரியங்கள் உருவாக்கப்பட்டு அதில் யுனானி, சித்தா மற்றும் செளரிக்பா மருத்துவ துறையின் பாகமான வாரியத்தின் தலைவராக டாக்டர்.ஜெகந்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன கால அளவு நான்கு ஆண்டுகளாகும். மத்திய அரசின் நியமன சம்பந்தப்பட்ட துறை இதை நேற்று அறிவித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தை சார்ந்த
டாக்டர். சீனீவாச பிரசாத் புட்ரூ, முதல்வர்/மருத்துவ இயக்குநர் திரு.பி.எம் கங்கன்வாடி ஆயுர்வேத மகாவித்யாலயா, பெல்காவி, அவர்கள் ஆயுர்வேத வாரியம் தலைவராகவும், டாக்டர். ரகுராம் பாட்டா, இயக்குநர் முதுகலை படிப்புகள், சுஷ்ருதா ஆயுர்வேதிக் மருத்துவ கல்லூரி, பெங்களூரு அவர்கள் மருத்துவ மதிப்பீட்டு மற்றும் தரநிர்ணயம் வாரியம் தலைவராகவும், பஞ்சாப் மாநிலத்தை சார்ந்த பேராசிரியர் (வைத்தியா) ராகேஷ் சர்மா, டீன், குரு ரவிதாஸ் ஆயுர்வேத பல்கலைக்கழகம் ஹோஷியர்புர், அவர்கள் நெறிமுறை மற்றும் பதிவு வாரியம் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர்.
ஜெகநாதன், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரியில் கடந்த 16 ஆண்டுகளாக மருத்துவம் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவராகவும், தற்போது முதல்வர் பொறுப்பும் வகித்துவருகிறார். கேரளா மாநிலத்தில் கண்ணூர் மாவட்டத்தின் நாரத் ஊரைச் சேர்ந்த இவர் சித்த மருத்துவத்தில் தமிழ்நாடு பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற பின் முனைவர் பட்டமும் பெற்றவர். டாக்டர்.மோகனாம்பிகை இவரது துணைவியார். தனஞ்ஜெய் மற்றும் ஹரிப்பிரியா இவரது பிள்ளைகள். இவரது இல்லம் சாந்திகிரி ஆசிரமம் அருகிலுள்ள கீரின் கார்டன் என்ற பகுதியில் பிரணவம் என்ற பெயரில் அறியப்படுகிறது. இவர் கேரளா மருத்துவ பல்கலைக்கழகத்தில் சித்த பிரிவில் ஆற்றிய பணிகள் சிறப்பானது.
இவர் ஆசிரமத்தின் ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி பிரிவுகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சாந்திகிரி ஆசிரமம் பொது காரியதரிசி சுவாமி குரு ரத்தினம் ஞான தபஸ்வி இவரைப் பாராட்டி வெளியிட்ட அறிக்கையில் இந்த நியமனம் பெரிதும் சிறப்புள்ளது என்றும் அதுவும் முதல் முறையாக உருவாக்கப்பெற்ற வாரியம் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றும் மேலும் கேரளாவில் சித்த மருத்துவ முயற்சிகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திலிருந்தும் கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் இந்த நியமனத்துக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து கொண்டே வருகிறது.

Related Articles

Back to top button