IndiaLatest

தியான மடத்தின் ஆன்மீகக் கண்கள் திறக்கப்பட்டன; குருவை தரிசிக்க மன நிறைவுடன் பக்தர்கள்

“Manju”

செய்யூர்: சென்னையின் குருபக்தர்களுக்கு இப்புத்தாண்டின் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக மாறி வருகிறது. குருவின் அருளையும் ஒளியையும் பொழிவதற்காக செய்யூர் ஆசிரமத்திற்கு குருஸ்தானியையின் புனித பயண வருகையை முன்னிட்டு செய்யூர் மக்கள் ஆனந்த மன நிறைவில் உள்ளனர். இன்று காலை 10 மணியளவில் குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவின் திருக்கரங்களால் தியான மடத்தில் விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் குரு அருளின் பிரகாச ஒளியின் புத்துணர்வை அனுபவித்து வருகின்றனர்.

மண்ணின் நிறத்தில் அமைந்த தியான மடத்தினுள்ளே நுழைந்தவுடன் உள்ளத்திற்குள் ஏதோ ஒரு பக்திப்பரவசத் துடிப்பும் மெய்சிலிர்ப்பும் ஏற்படுகிறது. உள்ளே சென்றதும், ஆன்மீக முறையில் எழுச்சியூட்டும் தரிசனத்தை அனுபவிக்க முடியும். இது அனைவரும் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று. நவஜோதி ஸ்ரீ கருணாகரகுருவின் திகைப்பூட்டும் ஒளி வடிவ திருவுருவமானது, பக்தர்களிடையே விவரிக்க முடியாத ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது.

விரிந்து கிடக்கும் தாமரைக்கு மேலே தியானம் செய்யும் குருவின் பிரகாச வடிவமானது குருவை இதுவரை சந்திக்காதவர்களுக்கும், குருவை சந்தித்தவர்களுக்கும் “குரு தரிசனம்” சமநிலையாகவும் மனதுக்கு இதமாகமானதாகவும் இருக்கும். மேலும் இது ஆன்மீக வாழ்க்கைக்கு இசைத்தொனியாகவும் மற்றும் ஒளி விளக்காகவும் திகழும்.

தியான மடம் என்பது மந்திரம் மற்றும் தியானத்திற்கான கருவூலமாகும். தியானம் ஆன்மீகத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இது இறைவனின் அருளை அனுபவிக்கும் நிலையாகவும் விளங்குகிறது. இப்பிரகாச ஒளியின் பூரணத்தை அனுபவிக்கும் மனித மனம் ஆழ்நிலையை கடந்து தியானத்தின் பேரின்ப உலகத்திற்கு அழைத்துச் செல்லும். குருவின் கருணை நீரோட்டத்தில், உலகப் படைப்பைக் கூடக் கண்டு அறியும் அரிய தரிசன வரக்கனிகள் சாதாரண பக்தனுக்கும் உண்டு. இது சாந்திகிரியின் ஆன்மீகக் கோட்பாடு. இதற்கு இணைகள் இல்லை.

தியானத்தில் பல நிலைகள் உள்ளன. ஒரு பக்தனுக்கு, தியானம் என்பது குருவிடம் மனதை ஒப்படைப்பதாகும். குருவிடம் மனதை ஒப்படைப்பதன் மூலம் அனைத்தையும் குருவிடம் சமர்ப்பிக்கின்றோம். குருவின் வழி அனைத்தும் காண்கிறோம். குருவே உண்மையான பரபிரம்மன் என்ற கருத்தை முன்னிறுத்தியது தியானம். எல்லாம் ஒரு மையப் புள்ளியில் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் தியான மடம். வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது செய்யூருக்கு கிடைத்த தியான மடம், பக்தியின் புதிய அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும்.

Related Articles

Back to top button