IndiaKeralaLatest

உற்சாகத்திரையில் அத்வய 2k23

அத்வயா 2k23 - மாணவர்களின் கலை நிகழ்ச்சியிலிருந்து.

“Manju”

போத்தன்கோடு : சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரியில் துவங்கிய கலை நிகழ்ச்சிப் போட்டிகள் கோலாகலமாகத் துவங்கியது. இப்போட்டிகள் நான்கு வண்ணங்களில் நான்கு பெயர்களைக் கொண்ட அணிகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றாலும் பார்வையாளர்களால் அனைவருக்கும் ஒரேபோன்று ஊக்கம் அளிக்கப்பட்டது.

‘விஸ்டீரியா வாரியர்ஸ்’ அணி வயலட் நிறத்தைத் தேர்ந்தெடுத்தது. ‘செலடோன் சாம்பியன்ஸ்’ அணிக்கு நீல-பச்சை நிறம் வழங்கப்பட்டது மற்றும் கடும் பச்சை நிறம் ‘எமரால்டு ஃபைட்டர்ஸ்’ அணிக்கு வழங்கப்பட்டது. ‘லகுனா லெஜண்ட்ஸ் ஹவுஸ்’ அணி மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்தது.

இன்றைய போட்டி நிகழ்வுகளில் முதன்முதலில் கிளாசிக்கல் நடனம் தொடங்கப்பட்டது . கிளாசிக்கல் நடனத்தில் ‘லகுனா லெஜண்ட்ஸ்’ அணி முதலிடம் பெற்றது. ‘எமரால்டு ஃபைட்டர்ஸ்’ மற்றும் ‘செலடோன் சாம்பியன்ஸ்’ ஆகிய இரு அணிகளும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர். பின்னர் மதியம் வரை நடைபெற்ற அமர்வில் லைட் மீயூசிக், மோனோஆக்ட் மற்றும் டேப்லோ ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லைட் மியூசிக் மற்றும் டூயட் பாடல் போட்டிகளில் லகுனா விஸ்டீரியா மற்றும் செலடோன் ஆகிய அணிகள் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். டேப்லோ போட்டியில் லாகுனா, செலடோன், எமரால்டு ஆகிய அணிகள் முறையே 1, 2 மற்றும் 3-வது இடத்தையும் மோனோஆக்டில் எமரால்டு அணி முதலாவது இடத்தையும் பிடித்தன. லகுனா இரண்டாவது இடத்திலும் விஸ்டீரியா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி கலைப் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.

பிற்பகலில் டப்ஸ்மாஷ், ஸ்பாட் டான்ஸ், திரைப்படப் பாடல், நாட்டுப்புற நடனம், டூயட் பாடல், மைம், ஃபான்ஸி ட்ரஸ், மற்றும் குழு நடனம் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. பார்வையாளர்களை சத்தமாக சிரிக்க வைத்த டப்ஸ்மாஷில் செலடோன் சாம்பியன்ஸ் முதல் இடத்தைப் பிடித்தது. விஸ்டீரியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. எமரால்டும் லகுனாவும் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. திரைப்படப் பாடல் மற்றும் நாட்டுப்புற நடனத்தில் லகுனா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. நாட்டுப்புற நடனப் போட்டியில் எமரால்டு இரண்டாமிடமும் விஸ்டீரியா மூன்றாமிடமும் பெற்றனர்.

முன்னதாகவே நடைபெற்று முடிந்ததான கவிதை, கட்டுரை போன்ற அரங்கிற்கு அப்பாற்பட்ட போட்டிகளின் முடிவுகளும் சரிபார்க்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு அணியினரும் பெற்றிருக்கும் புள்ளி விவரங்கள் வெளியிடப்படும் என இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் Dr. வி.ஏ.மேகலா தெரிவித்தார். நாளை முதல் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் விளையாட்டு மைதானங்கள் பரபரப்பாகாக் காணப்படும். நான்கு நாட்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் திருவனந்தபுரம் பல்கலைக்கழக மைதானத்தில் தடகளப் போட்டிகள் நடைபெறும்.

Related Articles

Back to top button