IndiaLatest

அன்பின் மணிக் குடைக்குள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியே சாந்திகிரி ஆசிரம செயல்பாடு – அமைச்சர் திரு.மனோ தங்கராஜ்

“Manju”

செய்யூர்: சாதி, மத பேதமின்றி அன்பின் மணிகுடைக்குள் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியையே சாந்திகிரி ஆசிரமம் செயல்படுத்தி வருகிறது என தமிழக மாநில பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

செய்யூர் கிளை ஆசிரமத்தில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழகம் சிறந்த ஆன்மீக பாரம்பரியம் கொண்டது. திருவள்ளுவரும், 18 சித்தர்களும் உலகிற்கு ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. வேதாந்தம் அல்லது ஆன்மிகக் கோட்பாடுகளைப் பற்றி பேசும்போது, ​​இத்தமிழ் நாட்டைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது, கடவுள் மனிதனின் உள்ளத்தில் இருக்கிறார் என்ற தத்துவத்தைக் கொண்ட ஆன்மீகம் ஈர்க்கப்பட வேண்டும். ‘தொடங்குக அறத்தை, தொடங்குக பணியை ‘ (எந்தப் பணியையும் தொடங்கும் முன் நமக்குள் ஒரு நேர்மை இருக்க வேண்டும்) என்பது மக்கள் பின்பற்ற வேண்டிய செய்தி என்றும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

கேரள மாநில உணவுத்துறை அமைச்சர் ஜி.ஆர். அனில் தலைமையில் நடைபெற்ற விழாவில் மிசோரம் முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழகத்தில் சாந்திகிரியின் புதிய மருத்துவ சேவை திட்டமான ‘மக்கள் நலம்’ மருத்துவ முகாம்களை நடிகர் தலைவாசல் விஜய் தொடங்கி வைத்தார்.

விழாவில் சுவாமி சைதன்யா, சுவாமி நிர்மோகாத்மா, சுவாமி குருரத்னம், சுவாமி சிநேத்மா, பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் சென்னை ஆர்ச்டியோசீஸ் டாக்டர். சாமுவேல் மார் தியோபிலிஸ், சகோதரி ஜான்சி (பிரம்மகுமாரிகள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

லத்தூர் நகரமன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி தணிகாசலம் வரவேற்புரை ஆற்றினார். தேசிய செயற்குழு உறுப்பினர் பி.கே. கிருஷ்ணதாஸ், கோகுலம் குழும நிறுவனங்களின் தலைவர் கோகுலம் கோபாலன், சென்னை நார்க் ரூட்ஸ் அதிகாரி அனு.பி.சாக்கோ, சிறப்புப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர். Dr.. டி. கே. சௌந்தரராஜன், சாந்திகிரி ஆசிரம கலை & கலாச்சாரப் பிரிவு ஆலோசனைக் குழு புரவலர் டாக்டர் டி.எஸ். சோமநாதன், மற்றும் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி பாபு, கே.எஸ்.ராமச்சந்திரன், செய்யூர் முங்கிராம பஞ்சாயத்து தலைவர் டி.பாபு, டாக்டர். பிரவீன்குமார், செய்யூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆர்.செந்தில் குமார், சாந்திகிரி செய்யூர் ஆசிரம பொறுப்பாளர் Adv. பி. ராஜேஷ், ஆர்.எஸ். லட்சுமி, எஸ். வளர்மதி, சி.கனகசபை, டி.பக்தன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

Related Articles

Back to top button