KeralaLatest

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சித்த உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த சர்வதேச மாநாடு – சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் பரிசு பெற்றனர்.

“Manju”

 

ஜனனி (டாக்டர்) ஷ்யாமரூப ஞான தபஸ்வினிக்கு வாய்மொழிக் கட்டுரை வழங்கலுக்கான ஊக்க விருது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சித்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய சர்வதேச மாநாடு – மாநாட்டில் பங்கேற்பாளர்கள்.

சென்னை: கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் “சித்தா உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஊட்டச்சத்து” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்திய சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியை வி.ரஞ்சிதா, ஆசிரியர் பிரிவில் சுவரொட்டி விளக்கத்தில் முதலிடம் பெற்றார்.

10,11 – ஆம் தேதிகளில் பல்வேறு வகையான வாய்மொழி & சுவரொட்டி விளக்கக்காட்சிகள் வழங்கும் நிகழ்வு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அல்பினியா கல்கரேட்டா (அரதா) & அல்பினியா கலங்கா (பேரரதா) ஆகியவற்றின் மேக்ரோஸ்கோபிகல் மதிப்பீடு – சித்த மருந்துகளின் தரப்படுத்தல் பற்றிய சுவரொட்டி விளக்கக்காட்சியில் குணபாடம் மருந்தியல் துறை இணைப்பேராசிரியர். வி. ரஞ்சிதா முதலிடம் பெற்றார். வர்ம மருத்துவம் உதவிப் பேராசிரியர் டாக்டர். கே. வி.விருந்தா வாய்மொழி வழங்கலுக்காக 3-ஆம் பரிசு பெற்றார். மற்ற ஆசிரியர்கள் டாக்டர். சி. பி. சி. பாரத் கிறிஸ்டியன், டாக்டர். சி. எஃப். கவிதா பல்வேறு தலைப்புகளில் வாய்மொழிக் கட்டுரை வழங்கினர். மாணவர்கள் பிரிவில் (17வது பேட்ச்) சார்பாக, எஸ்.ஷாபு, சுமையா யூசுப், எஸ்.எஸ்.சுபஸ்ரீ, ஆர். ஆனந்த், (18வது பேட்ச்) சார்பாக, எஸ்.ஜெபஸ் லில்லியன், (19வது பேட்ச்) சார்பாக, எம். நிகிதா, ஜி.பி.பிருந்தா, மற்றும் எம். யோகேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சுவரொட்டி விளக்கங்களை வழங்கினர். NCISM நடத்திய இக்கருத்தரங்கில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்க மாநாட்டில் கல்லூரியின் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 71 பேர் கலந்து கொண்டனர்.

Related Articles

Check Also
Close
Back to top button