LatestThiruvananthapuram

சாந்திகிரி சாகேத் ஹாஸ்பிடல் புதிய சுகாதார தத்துவம்-நவ ஆரோக்கிய சித்தாந்தம்

“Manju”

சாகேத் (புது டெல்லி): நவஜோதி ஸ்ரீகருணாகரகுரு அனைத்து வகையான மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்த புதிய -சுகாதாரக் கோட்பாட்டை(நவ ஆரோக்கிய சித்தாந்தம் ) பகிர்ந்துள்ளார். சாந்திகிரி சாகேத்தில் உள்ள வெள்ளி விழா மந்திரின் மூன்றாவது மாடியில் அமையும் சாந்திகிரி மருத்துவமனை, தேசிய தலைநகரில் சாந்திகிரியின் ஆரோக்கிய தர்ம கோட்பாட்டின் கலங்கரை விளக்கமாக இருக்கும். ஆயுர்வேதம், சித்தம் என சிறப்பு வாய்ந்த ஆயுஷ் மருத்துவத்தின் கூடவே ஹோமியோபதி, யுனானி, அலோபதி போன்ற அனைத்து சிகிச்சை முறைகளையும் இணைந்து புதிய சுகாதாரக் கோட்பாட்டின் தனிச்சிறப்பாக இந்த சிகிச்சை முறைகளும் அமைவது நவ ஆரோக்கிய சித்தாந்தத்தின் வெளிப்படையான உவமை ஆக கொள்ளலாம். பசுமையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தாழ்வாரம் நுழைவாயிலில் அனைவரையும் வரவேற்கிறது. ஓபி, பஞ்சகர்மா தியேட்டர், டாக்டர் கன்சல்டிங் ரூம் மற்றும் இரண்டாவது மாடியில் நான்கு உள் நோயாளி அறைகளும் அமைந்துள்ளன. வரவேற்பறையில் சாந்திகிரியின் தனித்துவமான ஆயுர்வேத சித்த மருந்து கவுண்டர் மற்றும் 100க்கும் மேற்பட்ட மூலிகைகளின் தாவரவியல் பெயர்கள் கொண்ட கண் காட்சி வரவேற்பறையில் காணலாம்.

Related Articles

Back to top button