IndiaLatest

சாந்திகிரி யாத்ரீகர்கள் மும்மூர்த்தி சங்கம தலத்தில் பஜனை மற்றும் சங்கல்பம்

“Manju”

சுசீந்திரம்: மும்மூர்த்திகளின் சங்கமமான சுசீந்திரத்தில் சாந்திகிரி அவதூது யாத்திரையாளர்கள் பஜனை மற்றும் சங்கல்பம் செய்தனர். மே 1ம் தேதி சாந்திகிரி ஆசிரமத்தில் இருந்து புறப்பட்ட அவதூத யாத்திரை மூன்றாவது நாள் சுசீந்திர தீர்த்தத்தில் வந்தடைந்தது. தென்னிந்தியாவின் முக்கிய கோவில்களில் சுசீந்திரத்தின் நிலை முன்னணியில் உள்ளது. இந்த கோவில் கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ளது. சாந்திகிரி ஆசிரம ஸ்தாபகர் குரு நவஜோதி ஸ்ரீகருணாகரகுரு இந்த கோவில் பற்றி கூறுகையில் இது பரசுராமன் நிறுவிய 108 கோயில்களில் முதன்மையானதாகக் கருதப்படுவதாக கூறியுள்ளார்.


சாந்திகிரி ஆசிரமப் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி, சுவாமி ஸ்நேஹாத்ம ஞான தபஸ்வி, சுவாமி ஜனபுஷ்பன் ஞான தபஸ்வி ஆகியோர் தலைமையில் குரு ஸ்தோத்ர பஜனை சுசீந்திரம் பகுதியில் அலாதியான உணர்வைத் தந்தது. சுசீந்திரம் யாத்திரை முடிந்து அவதூது யாத்திரையாளர்கள் கன்னியாகுமரி திரும்பினர்.

Related Articles

Back to top button