IndiaLatest

சாந்திகிரி அவதூதயாத்திரைக்கு திருவனந்தபுரம் நகரில் சிறந்த வரவேற்பு

“Manju”

ஸ்ரீ கருணாகரகுருவின் சிஷ்ய பரம்பரையின் அவதூத யாத்திரைக்கு காவடியாற்றில் வரவேற்பு அளிக்கப்பட்டபோது.

திருவனந்தபுரம்: சாந்திகிரி ஆசிரமத்தின் ஸ்தாபகர் நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் வாழ்க்கை முத்திரைகள் பதிந்த இருபத்தைந்து யாகபூமிகள் வழியாக சீடர்கள் நடத்தும் அவதூதயாத்திரைக்கு தலைநகரில் பொது மக்கள் வரவேற்பை அளித்து ஒரு சேர திரண்டு வந்தனர். மே 1-ஆம் தேதி ஆலப்புழாவில் சந்திரூரில் தொடங்கிய யாத்திரை, ஆலுவா அத்வைத ஆசிரமம், வர்கலா சிவகிரி, பீமாபள்ளி, சுசீந்திரம், கன்னியாகுமரி வழியாக சனிக்கிழமை பிற்பகல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை வந்து அடைந்தது. மாலை 4 மணிக்கு
ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி ஆகியோர் தலைமையில் சுமார் 300 பேர் கொண்ட குழுவினர் வெள்ளையம்பலத்தில் இருந்து பாதயாத்திரையாக கெளடியார் விவேகானந்தா பூங்காவை அடைந்து அனந்தபுரியின் அன்பைப் பெற்றனர்.

வி.கெ. பிரசாந், எம் . எல்.எ., பிலிவர்ஸ் சர்ச் தலைமை, பாளையம் இமாம் டாக்டர். யூசுப் மெளலவி, முன்னாள் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன், முன் மக்கள் அவை உறுப்பினர் பீதாம்பர குரூப், கோபன் சாஸ்தமங்கலம் , பி.கே.எஸ். ராஜன், ஆப்ரகாம் தாமஸ் , எஸ். குமார், ஆகியோர் அவதூதயாத்திரையை பூர்ண கும்பம் அளித்து வரவேற்றனர். பின்னர் விவேகானந்தா பூங்காவில் நடந்த வரவேற்பு கூட்டத்தை வி.கே.பிரசாந்த் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நாட்டு மக்கள் எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்பதே நாட்டின் பலமும் வளமும் ஆகும். இதுபோன்ற ஒற்றுமைச் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் சாந்திகிரி ஆசிரமத்தின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என்றார் எம்.எல்.ஏ. கூட்டத்திற்கு ஆசிரம தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆசிரம துணைத் தலைவர் சுவாமி நிர்மோகாத்ம ஞான தபஸ்வினி, ஜனனி அனவாத்யா ஞான தபஸ்வினி, ஜனனி கிருபா ஞான தபஸ்வினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநில துணைத் தலைவர் சி.சிவன்குட்டி, பி.ஜே.பி. மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ், பொருளாளர் எம்.பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாந்திகிரி ஆசிரம ஆலோசனைக் குழு ஆலோசகர் (கலை & கலாச்சாரம்) எஸ். குமார் பொது மக்களை வரவேற்றார்.

கெவடியாறில் வரவேற்பு அளிக்கப்பட்டு, போத்தங்கோட்டை வந்தடைந்த அவர்கள், பொதுமக்களின் வரவேற்பைப் பெற்று, சாந்திகிரி ஆசிரமத்தில் அவதூதயாத்திரையை அர்ப்பணித்தார். குருவின் தியாக வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், குருவின் ஆதிசங்கல்பத்தில் இணைந்த தினமான நவஒலி ஜோதிர்தினத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சன்யாச-பிரம்மச்சார்யா-கிரஹஸ்த சங்கத்தினர் அவதூதயாத்திரையை ஏற்பாடு செய்தனர். நவ ஒலி ஜோதிர் தினம் மே 6 ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்.

புகைப்படம்: நவஜோதிஸ்ரீ கருணாகரகுருவின் வாழ்க்கை பாதைகள் வழியாக கெளடியாறில் நடக்கும் அவதூத யாத்திரையை வி.கே.பிரசாந்த் எம்.எல்.ஏ தலைமையில் ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி மற்றும் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி ஆகியோருக்கு வரவேற்பு.

Related Articles

Back to top button