IndiaLatest

*மதுரையில் மூன்று நாள் ஆயுஷ் கண்காட்சி ஆரம்பம்;

“Manju”

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அரங்கில் பார்வையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

மதுரை: தென்னிந்தியாவில் இந்திய பாரம்பரிய சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளின் பயன்களை அதிகபட்சமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் மூன்று நாள் ஆயுஷ் கண்காட்சி மதுரையில் டாக்டர்.அம்பேத்கர் சாலை மதிஸ்யா மண்டபத்தில் இன்று தொடங்கியது. கண்காட்சியின் ஒரு பகுதியாக பாடங்கள் குறித்த கருத்தரங்கு மற்றும் ஆய்வறிக்கை வழங்கல் ஆகியவை நடைபெறும். தமிழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பிரபல ஆயுஷ் பயிற்சியாளர்கள் மற்றும் முன்னணி ஆயுஷ் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். கண்காட்சியின் ஒரு பகுதியாக 100க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் செயல்பட்டு வரும் சாந்திகிரி ஆசிரமத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. இக் கண்காட்சி அரங்கங்கள் தரைத்தளத்தில் உள்ள பிரதான மண்டபத்தில் 28,29,30 ஆகிய எண்களில் உள்ளன. மருத்துவ சேவைகள் மற்றும் மருத்துவக் கல்வித் துறைகளுடன் இணைந்து சந்தைப்படுத்தல் துறையால் இந்த கண்காட்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாந்திகிரி கண்காட்சி அரங்கை மதிசியா முன்னாள் ஜனாதிபதி டாக்டர் கே.ஜி. கியானபிரபாகரன் திறந்து வைத்தார். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன், வர்ம மருத்துவ நிபுனர் டாக்டர் மணிகண்டன், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரகாஷ் எஸ்.எல்., மருத்துவ அலுவலர் டாக்டர். சாகர், சாந்திகிரி மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றும் ஏ.ஜி.எம் ஷாஜி இ.கே, மக்கள் தொடர்பு முதுநிலை மேலாளர் கே.சி. வேணுகோபால், செந்தில்.டி, அமீர் பாஷா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சிக்கு வருகை புரியும் தாங்கள் ஆசிரம மருந்து உற்பத்தித் துறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத-சித்த மருந்துகள் பெறவும் மற்றும் சிறப்பு சிகிச்சைகளுக்காகவும் மதுரையில் செயல்பட்டு வரும் சாந்திகிரியின் சித்த மருத்துவ மையத்தை அனுகலாம். மேலும் சிறப்பு மருத்துவ மனைகள் கொண்டதும் மற்றும் இந்தியாவின் முதல் ஆங்கில வழி சித்த மருத்துவக் கல்லூரியுமான சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி கேரள மாநிலம் போத்தங்கோடு என்ற இடத்தில் இயங்கி வருகிறது. சித்த மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ மாணவியர்களுக்கான சேர்க்கை மற்றும் செயல்முறை பற்றியதான விவரங்களை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

சாந்திகிரியின் கண்காட்சி அரங்கிற்கு முதல் நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். கருத்தரங்கில் சித்த மருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை வழங்கி சிறப்பாகப் பங்கேற்று வருகின்றனர்.

புகைப்படம்: மதுரையில் நடைபெறும் மதிசியா கண்காட்சியில் சாந்திகிரி ஸ்டாலை மதிசிய முன்னாள் தலைவர் டாக்டர் கியானபிரபாகரன் திறந்து வைத்தார். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன், டாக்டர் மணிகண்டன், ஷாஜி.இ.கே. ஆகியோர் அருகில் உள்ளனர்.

Related Articles

Back to top button