IndiaLatest

செய்யூரில் கல்வி நிலையம், மருத்துவமனை மற்றும் ஆரோக்கிய மையம் ஆகியன அமையவிருக்கும் வளாகத்தில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

“Manju”

செய்யூர் (சென்னை) : சாந்திகிரி ஆசிரமம் சென்னை செய்யூர் கிளையில் கல்வி நிலையம், மருத்துவமனை, மற்றும் ஆரோக்கிய மையம் அடங்கிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. (29-01-2023 திங்கள்கிழமை காலை நடைபெற்ற விழாவில், ஆசிரம சென்னை மண்டலத் தலைவர் சுவாமி மனுசித் ஞானதபஸ்வி, கல்வி நிலையம், மருத்துவமனை, மற்றும் ஆரோக்கிய மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குருஸ்தானிய அபிவந்திய சிஷ்ய பூஜிதா சென்னையிலுள்ள செய்யூர் ஆசிரமத்திற்கு வருகை தந்தார். ஜனவரி முதல் வாரத்தில் குருஸ்தானிய அபிவந்த்ய சிஷ்ய பூஜிதா வருகை தந்த பொழுது, சாந்திகிரி மருத்துவமனை, ஆரோக்கிய மையம், மற்றும் கல்வி வளாகமும் அவரால் திறந்து வைக்கப்பட்டது.

சாந்திகிரி ஆசிரம நிறுவனர் நவஜோதி ஸ்ரீகருணாகரகுருவின் குருகுல சம்பிரதாயம் பற்றிய தரிசனங்கள் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் கோட்பாட்டை நிறைவேற்றும் வகையில் அமைந்ததாகும். தற்போது இங்கு நிறுவப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் சாந்திகிரியின் மூத்த மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, பாரா மெடிக்கல் சயின்ஸ், திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக மத்திய அரசின் உதவியுடன் டெல்லியில் தெராப்பி பற்றிய மருத்துவப் படிப்பும் நடைபெற்று வருகின்றது.

சாந்திகிரி ஆசிரமத்தின் நிறுவனர் குரு நவஜோதி ஸ்ரீகருணாகரகுருவின் நவ ஆரோக்கிய தர்ம சித்தாந்தத்தை நிறைவு செய்வதையும், இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சுகாதார மையம் நிறுவப்படுகிறது.

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ ஆசிரியரும், குரு தர்மபிரகாஷ சபை உறுப்பினருமான டாக்டர். ஜனனி சியாமரூப ஞான தபஸ்வினி, சுவாமி சத்யசித் ஞானதபஸ்வி, கே.எஸ். பணிக்கர், வழக்கறிஞர் ராஜேஷ் செல்வி, உதவி மேலாளர் பிரபு.சி.ஆர்., ஆசிரம கிளை ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button