IndiaLatestThiruvananthapuram

சாந்திகிரி சித்த மருத்துவக்கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

“Manju”

போத்தன் கோடு : ‘ஆஸாதிகா அம்ருத் மகோத்ஸவ்’ என்று மத்திய அரசால் பெயரிடப்பட்டு இருக்கின்ற 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் துவக்க விழா சாந்திகிரி சித்த மருத்துவக்கல்லூரியில் இன்று நடந்தது. இதன் தொடர்பாக பலவித நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அந்த நிகழ்ச்சிகளை சாந்திகிரி ஆசிரம பொதுச்செயலாளர் சுவாமி குரு ரத்தினம் ஞான தபஸ்வி இன்றைய விழாவில் துவக்கி வைத்தார். ‘ஒரு மனிதன் – ஒரு மரம், நாட்டிற்காக ‘ என்ற என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்ற பர்யாவரன் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அளவிலான நிகழ்ச்சியை சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டு வைத்து சுவாமி துவங்கி வைத்தார். சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக வாழ்க்கைமுறை நோய்களுக்கான இலவச சித்தமருத்துவ முகாம்கள், ஆரோக்கிய விழிப்புணர்வு முகாம்கள், பள்ளி & கல்லூரி மாணவர்களுக்கான மூலிகைச் செடிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் முதலிய பலவித நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று விழாவில் தலைமை வகித்த கல்லூரி முதல்வர் பொறுப்பு வகிக்கும் பேரா.டாக்டர். பி. ஹரிஹரன் எடுத்துரைத்தார். பர்யாவரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பகுதி செயலாளர், திரு. பி. ராஜசேகரன் விழாவில் முக்கிய உரை நிகழ்த்தினார். சாந்திகிரி ஹெல்த்கேர் அண்ட் ரிசர்ச் ஆர்கனைசேஷன் நிர்வாகப் பொறுப்பு வகிக்கும் சுவாமி குரு சவித் ஞான தபஸ்வி, திரு. சேதுநாத் மலையாளப்புழ- திருவனந்தபுரம் நகர பகுதி மேலாளர், திரு ஜி. ஆர். ஹன்ஸ்ராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், திரு. பினோத், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், திரு.ஸி.சந்தீப் என்பவர்கள் விழாவில் பங்குபெற்றனர். கோவிட் விதிமுறைகளை அனுசரித்து நடத்தப்பட்ட விழாவில் திரு.எஸ். விஜயன் வரவேற்புரையும் திருமதி. ஷீஜா நன்றி உரையும் நிகழ்த்தினர். பதினெட்டாம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளர் பகுதியில் நடக்க இருக்கின்ற இலவச சித்த மருத்துவ முகாமுக்கு வருபவர்கள் முன்கூட்டியே தங்களது பெயரை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர் பதிவு செய்வதற்கான தொலைபேசி எண் 996 1755 263

 

Related Articles

Back to top button