LatestThiruvananthapuram

உலகின் சிறந்த ஆன்மீக தரிசனம் அன்பும் கருணையும் : சுவாமி அசங்கானந்த கிரி

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): சக உயிர்கள் மீது கருணை காட்டுவதுதான் உலகின் மிகப்பெரிய ஆன்மிக தரிசனம் என்றும், பிறர் துன்பம் தன் வலியாக மாறும்போது கருணை பிறக்கும் என்றும், அத்தகைய கருணையின் அடையாளம் நவஜோதி ஸ்ரீகருணாகர குரு என்றும் சிவகிரி மடச் செயலர் சுவாமி அசங்கானந்தா கிரி கூறினார். நமக்குள் பிறர் மீது அன்பு, இரக்கம், சகோதரத்துவம் என அனைத்து தரப்பு விஷயங்களையும் உள்ளடக்கிய தரிசனம் நவ ஒலி ஜோதிர் தினம் உயர்த்தி காண்பிக்கிறது என்றும் கூறினார். சாந்திகிரி ஆசிரமத்தில் சிறப்பு அழைப்பாளர் ஆக உரையாற்றினார்.

நவஜோதி ஸ்ரீகருணாகர குரு ஆரம்ப காலத்தில் சிவகிரி ஆசிரமத்தில் கர்மம் ஆற்றியுள்ளார் என்றும் பிறகு தனது தியாக வாழ்க்கையில் தரிசனம் மற்றும் காருண்ய செயல்கள் என் உலகிற்கு அளித்த வளர்ச்சி தான் பின் வரும் காலம் கண்டது.
எல்லா மனதிலும் ஒரு சைதன்யம் உண்டு என்றும் கூறினார்.

மதியம் நடந்த நவ ஒலி ஜோதிர் தினம் விழா சம்மேளனம் சாந்திகிரி ஆசிரம பொது காரியதரிசி துவக்கி வைத்தார். ஆசிரம தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி சிறப்பு பங்கு பெற்றார்.

Related Articles

Back to top button