LatestThiruvananthapuram

சாந்திகிரி ஆசிரமத்தில் தீபபிரதட்சினம் ஆன்மீக ஒளி வீசியது

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): சாந்திகிரி ஆசிரமத்தில், 24வது நவஒலி ஜோதிர் தின விழாவையொட்டி, ஆன்மீக ஒளி மற்றும் பக்தி பரவசத்துடன் தீபபிரதட்சிணை நடந்தது. இரவு 7 மணிக்கு யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆசிரம வளாகத்தை வலம் வந்து ஆன்மிக மண்டலத்தை அடைந்து குருபாதத்தில் ம் பிரார்த்தனை செய்தனர். பிரதட்சிணையின் போது பக்தர்களிட மிருந்து தொடர்ந்து வந்த குரு மந்திரங்கள் வான்வெளி எங்கும் இரண்டற கலந்தன. அந்தப் பகுதி முழுவதும் நறு மணம் வீச நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் உள்ளங்கையில் தீபங்களை ஏந்தி ஆசிரம வளாகப் பாதை முழுவதும் வலம் வந்தனர். அந்தி வேளையில் ஆசிரமம் முழுவதும் விளக்கொளியால் ஜொலித்தது. பஞ்சவாத்ய நாதஸ்வர மேளங்களும், பெரும்பறையும் காற்றில் ஒலித்தது. ஆசிரம தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி தீபபிரதட்சிணைக்கு தலைமை வகித்தார். தீபபிரதட்சிணையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை தீபபிரதக்ஷிணைக்கு பின் (குரு ஆதிசங்கல்பத்தில் இணைந்த நேரம்) தாமரை பர்ணசாலையில் சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு மலர் அர்ச்சனை நடந்தது. பல்வேறு நாதங்களின் முழக்கமும், அலங்கார விளக்குகளின் பிரகாசாமும் பிரார்த்தனை விழாக்களுக்கு சிறப்பாக இருந்தது. மே 7ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’ நிகழ்வுடன் நவஒலி ஜோதிர் தின விழா நிறைவடையும்.

Related Articles

Back to top button