LatestThiruvananthapuram

மனதில் குரு மட்டுமே – ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’ பக்தியின் ஆழத்தில்

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): சாந்திகிரி ஆசிரமத்தில் இன்று ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை தாமரை பர்ணசாலாவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் மலர் அர்ச்சனை நடந்தது. துறவிகள், பிரம்மச்சாரிகள் , பிரம்மச்சாரிணிகள் மற்றும் ஆத்ம உறவினர்கள் பிரார்த்தனை சடங்குகளில் பக்தியுடன் பங்கேற்றார்கள். பக்தி பரவசமாய் ஆழ்ந்த பிராத்தனையுடன்
24 வது நவஒலி ஜோதிர் தின விழா நிறைவு பெற்றது

குருவால் மட்டுமே நிறைந்த மனது, பக்தியின் மேன்மையான மற்றும் பிரார்த்தனையின் தருணங்கள் என 24வது நவோலி ஜோதிர் தின விழா நிறைவடைந்தது. மே 7 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தொடங்கிய ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆசிரம நிறுவனர் குரு நவஜோதி ஸ்ரீகருணாகரகுரு மே 6 அன்று ஆதிசங்கல்பத்தில் (சமாதி) அடைந்தார். ஆனால் அவரது உடல் மே 7 அன்று மாலை ஐந்து மணிக்கு பர்ணசாலாவில் சிறப்பு நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தருணத்தை சாந்திகிரி பரம்பரை திவ்வியபூஜா வழிபாட்டிற்கும் அர்ப்பணிப்பாகவும் கடைப்பிடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நவஒலி ஜோதிர்தின கொண்டாட்டங்கள் ‘திவ்வியபூஜா சமர்ப்பணம்’ பூஜையுடன் முடிவடையும்.

திவ்யபூஜையின் ஒரு பகுதியாக நேற்று மாலை 5 மணிக்கு ஆசிரமத்தில் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி பொதுச்செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, துணை தலைவர் சுவாமி நிர்மோகாத்ம ஞான தபஸ்வி ஆகியோர் தலைமையில் சன்னியாசிகள் குழுவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பர்ணசாலையில் சன்னியாசிகள், சன்னியாசினிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் பிரம்மசாரிணிகள் சிறப்பு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சன்னியாசி சன்னியாசிகள் தலைமையில் அகண்டநாம மந்திரங்களை ஓதி ஆசிரமத்தில் பிராத்தனை ஆலயத்தில் துவங்கி , சககரணம் மந்திரம் (கூட்டுறவுவின் கோயில்) முழுமையாகவும் மற்றும் பர்ணசாலை முன்பாக பிரதட்சிணம் செய்தனர். அப்போது பக்தியில் அகண்டநாம மந்திரங்களை ஓதியது பக்தர்களின் மனதை கொள்ளை கொள்ளச் செய்தது. அந்த பகுதி முற்றும் பக்தி பரவசத்தால் ஓங்கிய பிரத்யதேகமான சூழ்நிலையாக இருந்ததது. குருப்பிரகாசத்தில் ஆழ்ந்து , தீபம் வணங்கி பிரசாதம் பெற்றுத் திரும்பப் பயணத்திற்குத் தயாராகினர் பக்தர்கள். 72 நாட்கள் விரதம், மலர் அர்ச்சனை மற்றும் குருவின் 24வது நவஒலி ஜோதிர்தின விழா மே 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நிறைவடைந்தது.

Related Articles

Back to top button