IndiaLatest

பழங்குடியின மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சாந்திகிரியின் கண்காட்சி

“Manju”
: நம்பியார்குன்று சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெறும் பிரதிஷ்டாபூர்த்திகரணம் முன்னதாக பாரம்பரிய பாணியில் ஆன்மிக மண்டலம் அமைக்கும் காட்சி .

சுல்தான்பத்தேரி: வயநாட்டில் நம்பியார்குன்றில் உள்ள சாந்திகிரி ஆசிரமம், அதன் பிரதிஷ்டாபூர்த்திகரணம் முன்னிட்டு, ஏப்., 5ம் தேதி காலை 9 மணிக்கு, வயநாட்டு மக்கள் வாழ்க்கை கலாச்சாரம் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காட்சிகளுடன் தயாராகி வருகிறது.

ஆசிரமத்தின் ஆன்மிக மண்டலம், மண் மற்றும் மரங்களுக்கு இடையூறு இல்லாமல் இயற்கை அழகுடன் சுற்றுப்புற சூழலை தழுவி அமைந்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் கட்டுமான நடவடிக்கைகள் முழுக்க முழுக்க பழங்குடியினரின் பாரம்பரிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை.

பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் பழங்குடியினர் கிராமம் போன்று கண்காட்சிக்காக நீண்ட மண் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏழு அடி உயர மூங்கில்கள் உபயோகித்தும் முற்றிலும் பாரம்பரிய மற்றும் இயற்கையுடன் இணைந்து தயாராகி வருகிறது. மண்ணால் கட்டப்பட்டு மண் கலவையை கைகளால் பூசி மெழுகி சரி செய்கின்றனர். தரை மண்ணால் பூசி மெழுகப்பட்டுஉள்ளது. அருகே உள்ள கொட்டகையின் மேற்கூரை மூங்கில் மற்றும் வைக்கோலால் ஆனது. இதன் சுற்று சுவர் அரை ஆள் அளவு உயரம் குறைத்து சுற்றிலும் காண்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

வீட்டின் வழுவழுப்பான சுவர்களில் ஸ்வஸ்திகா சின்னங்கள் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கைவண்ணத்தில் அழகாக வரையப்பட்டுள்ளன. இது குறித்து கட்டுமான பணி செய்யும் பழங்குடியின பெண்கள் கூறுகையில், கடந்த காலங்களில் வீடுகளில் சுவர்களுக்கு வெளியே தரையில் இதுபோன்ற ஓவியங்கள் இருந்துள்ளன. இது ஏறத்தாழ தமிழ்நாட்டில் பொதுவாக வீட்டின் முன்னர் தரையில் இடும் கோலத்தை போன்ற ஒரு உணர்வு.

பிரதிஷ்டை நேரத்தில், ஆதிவாசிகள் சந்தனம் மற்றும் அஷ்டதூபம் ஆகியவற்றின் நறுமணத்தால் நிறைந்த ஆசிரம சூழலில் பாடுவார்கள். ஞரளத்து ராம புதுவாளின் மகனும் பிரபல சோபனா இசைக் கலைஞருமான ஞரளத்து ஹரிகோவிந்தன் அவர்களும் அர்ப்பணிப்பு விழாவில் இசைக்கவுள்ளனர்.

அன்றைய தின முக்கிய அரங்கானது பழங்குடியின பாணியில் ஆதிவாசி முதியவர்களால் அவர்கள் வீடு போன்று அமைக்கப்பெற்று உள்ளது. அதன் நடுவில் மண்ணால் இயற்கையான திறந்த மேடை.

இரவு 8 மணிக்கு அதே அரங்கில் முன்கால திருவிழாக்கள் போல் பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படும். அதனுடன் ஃபியூஷன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

Related Articles

Back to top button