IndiaLatest

சாந்திகிரியில் 24-வது நவஒலி ஜோதிர் தின விழா, மேற்கு வங்க ஆளுநர் துவக்கம்

“Manju”

 

திருவனந்தபுரம் : சாந்திகிரி ஆசிரமத்தில் நவஜோதி ஸ்ரீ கருணாகர குருவின் நவஒலி ஜோதிர் தினமான மே 6 சனிக்கிழமையன்று, குரு பூத உடலில் இருந்து பூரண புகழ் உடலுடன் ஒன்றிணைந்த ‘அதிசங்கல்ப ‘ த்தின் 24-வது ஆண்டு நினைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நவ ஒலி கொண்டாட்டங்கள் நாளை (மே 5-ஆம் தேதி) தொடங்குகிறது. மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் காலை 8 மணிக்கு விழாவை துவக்கி வைக்கிறார். விழாவில் ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, மாணிக்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் குதிரைக்குளம் ஜெயன், நலம் மற்றும் மேம்பாட்டு நிலைக்குழு தலைவர் ஆர்.சஹீரத் பீவி, சிந்தூரம் தொண்டு நிறுவன தலைவர் சபீர் திருமலா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மே 6 ஆம் தேதி தாமரை பர்ணசாலாவில் புஷ்ப சமர்ப்பணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும். காலை 5 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் தொடங்கி கொடியேற்றம் மற்றும் காலை 6 மணிக்கு புஷ்ப சமர்ப்பணம் நடைபெறும். ஆசிரமத்தின் பல்வேறு கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பிரதிநிதிகள் கூட்டம் அங்கு நடைபெறும். கூட்டம் முடிந்ததும் குரு தரிசனம் மற்றும் பக்தர்கள் குருவுக்கு பல்வேறு காணிக்கைகள் சமர்ப்பிப்பது முதலான பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் .

கேரள உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் ஜி.ஆர். அனில் மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் நவ ஒளி ஜோதிர் தின மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மிசோரம் முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விழாவிற்கு மாநில கூட்டுறவு சங்க தலைவர் கோலியக்கோடு கிருஷ்ணன் நாயர் தலைமை தாங்குகிறார். ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, பாளையம் இமாம் டாக்டர். வி.பி. சுஹைப் மௌலவி, மலங்கரா சபை திருவனந்தபுரம் பேராயர் உதவி ஆயர் Dr. மேத்யூஸ் மார் பாலி கற்பூஸ், சிவகிரி மட குரு தர்ம பிரசார சபை செயலாளர் சுவாமி அசங்கானந்தகிரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். விழாவில் கேரள முன்னாள் தலைமைச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் நாயர் கவுரவிக்கப்படுகிறார்.

சுவாமி ஜனநன்ம ஞான தபஸ்வி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஜே.ஆர். பத்மகுமார், முஸ்லிம் லீக் கொல்லம் மாவட்டத் தலைவர் நௌஷாத் யூனிஸ், கலாச்சார நல நிதி வாரியத் தலைவர் மதுபால்.கே, முன்னாள் டிஜிபி கே.பி.சோமராஜன், யுவமோர்ச்சா மாநிலத் தலைவர் பிரபுல் கிருஷ்ணன், சகோதரி ஷைனி (பிரம்மகுமாரி), திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.முனீர், பாஜக மாவட்டப் பொருளாளர் எம்.பாலமுரளி, திருவனந்தபுரம் விமான நிலைய சிஇஓ தர்ஷன் சிங், சரஸ்வதி வித்யாலயா தலைவர் ஜி.ராஜ்மோகன், ஸ்வஸ்தி அறக்கட்டளை தலைவர் ஏபி ஜார்ஜ், முன்னாள் மேயர் கலாசார வேதி செயலாளர் வழக்கறிஞர் மணக்காடு ராமச்சந்திரன், சிபிஎம் வெஞ்சாரமூடு பகுதி செயலாளர் இ.ஏ.சலீம், மாணிக்கல் கிராம பஞ்சாயத்து நிலைக்குழு தலைவர் அனில்குமார். எம், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் கோலியக்கோடு மகேந்திரன், கேரள காங்கிரஸ் மாநிலக்குழு உறுப்பினர் ஷோபி கே, காங்கிரஸ் கோலியக்கோடு மண்டல் குழு தலைவர் கிரண்தாஸ், பூலாந்தரா.டி.மணிகண்டன் நாயர், சுகேசன்.கே மற்றும் டாக்டர். ஸ்வப்னா சீனிவாசன் மாநாட்டில் பங்கேற்கிறார்.

மே 6 மாலை 6 மணிக்கு ஆசிரம வளாகத்தைச் சுற்றிலும் தீபப் பிரதட்சிணம் நடைபெறும், இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இரவு 9 மணி முதல் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 7ம் தேதி மாலை 5 மணி திவ்ய பூஜை சமர்ப்பணத்துடன் நவஒலி ஜோதிர் தின 24-வது ஆண்டு விழா நிறைவு பெறுகிறது.

Related Articles

Back to top button