LatestThiruvananthapuram

ஒற்றுமையும் பாரம்பரியமும் சாந்திகிரியின் முக முத்திரைகள் ( அடையாளங்கள்);கேரள இமாம் டாக்டர் .வி.பி.சுஹைப் மௌலவி

“Manju”

போத்தன்கோடு ( திருவனந்தபுரம் ): சாந்திகிரி ஆசிரமம் பல்வேறு சமூக மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட மக்களை அமைதியான சூழ்நிலையில் ஒரே கூரையின் கீழ் கொண்டு வர முடிகிறது. இதேபோல், ஆயுர்வேதம் மற்றும் சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் புதிய ஆரோக்கிய தர்மத்துடன் இணைந்து புதிய சுகாதார கோட்பாட்டை உருவாக்குகின்றன. இது மிகவும் பெருமைக்குரிய செயல் என திருவனந்தபுரம் பாளையம் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் டாக்டர் .வி.பி.சுஹைப் மௌலவி
தெரிவித்தார். மே 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற 24 வது நவஒலி ஜோதிர் தின மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசினார். இங்கு விஷமில்லா காய்கறிகள் மூலம் கறிகள் தயாரிக்கப்படுவதுடன் அன்னதானமும் செய்யப்படுகிறது. சைவ ஹோட்டலும் உள்ளது. பாரதிய சம்பிரதாய ஆயுர்வேத சித்த மருந்துகளை தயாரித்தும் மருத்துவத்தை செயல்படுத்தியும் வருகிறது . .இந்த ஆசிரமத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆசிரமம் எந்த ஒரு விஷயத்தையும் சச்சரவுகள் இன்றி அமைதியாக சமாளிப்பதால் இந்த ஆசிரமம் சமுதாய காவலாளியாக நிற்க வல்லது என்றார்.

கோழிக்கோடு சாந்திகிரி விஸ்வ ஞான கோவில் திறப்பு விழா அன்று, ஆசிரமத்தில் மாலை ஆராதனை வழிபாடு நடந்து கொண்டிருக்கும்போதே அதே நேரத்தில் நோன்பு திறக்கும் வாய்ப்பு அமைந்ததும் ‘வாங்கு ‘ சொல்லவும் இரண்டற ஒன்றாக கலந்து மத நல்லிணக்கத்தின் மனித நேயத்தின் அழகிய மறக்கமுடியாத காட்சி என்பதை, அன்று உலகமே கவனித்ததாக, மறக்கமுடியாத காட்சி என்றும் இமாம் கூறினார். . இரவு 7 மணிக்கு தீபபிரதச்சனம் பிறகு அமைச்சர் ஜி.ஆர். அனில் நவஒலி மாநாட்டில் கலந்து கொண்டார் . ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞானதபஸ்வி தலைமை வகித்தார். எம்.பி பிரமோத், ஏ. ஜெயபிரகாஷ், டி. நிறைவு கூட்டத்தில் மனோஜ், சபீர் திருமலா, பிரம்மச்சாரிணி வந்திதா பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Articles

Back to top button