IndiaLatest

செய்யூரில் குருவை வரவேற்க கிராம மக்களும் பஞ்சாயத்தும் கைகோர்க்கின்றனர்

“Manju”

செய்யூர் (சென்னை): சாந்திகிரி சென்னை, செய்யூர் கிளை ஆசிரமத்திற்கு இன்னும் இரண்டு நாட்களில் குரு வந்து சேரவிருக்கிறார். குரு பக்தர்களுடன் கிராம மக்களும் குருவை தரிசிக்க வருகின்றனர். குருவை வரவேற்க, செய்யூரில் இருந்து ஆசிரமம் வரை சாலையின் இருபுறமும் நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. குரு மற்றும் ஆசிரமத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்ற அவர்கள், இதற்கு முன்பும் ஆசிரமத்தின் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். இம்முறை துப்புரவுப் பணிக்காக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மகளிர் சங்கம் சார்பில் சுமார் 300 தொழிலாளர்களால் செய்யவிருக்கின்ற இத்தூய்மைப் பணியை பஞ்சாயத்து முன்னின்று நடத்துகிறது. தமிழ் இளைஞர்களின் வாழ்வில் பொன்னான தருணங்கள் குருவின் வருகையால் நிகழப் போகிறது. சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் இன்று முதல் தமிழக கிராமங்களுக்குச் சென்று இலவச சித்த மருத்துவ முகாமைக் குறித்து தெரிவிக்கும்போது அம்மக்களுக்கு ஆசிரமத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்படும் சூழல் உண்டாகும்.

கிகூரில் சாலையை சுத்தம் செய்யும் குடும்பஸ்ரீ பணியாளர்கள்

ஜனவரி 5 ஆம் தேதி, ஆசிரமம் குருஸ்தானிய அபிவந்திய சிஷ்ய பூஜிதா செய்யூரை வந்தடைகிறார். 6 ம் தேதி உள்ளூர் மக்களுக்கு குருஸ்தானிய தரிசனம் வழங்கப்படும். 7ம் தேதி தரிசன மந்திரத்தில் தீபம் ஏற்றப்பட்டு பூஜை மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். 8 ம் தேதி குருஸ்தானியா போத்தன்கோடு ஆசிரமத்திற்கு திரும்பிச் செல்கிறார்.

Related Articles

Back to top button