IndiaLatest

சரித்திரம் படைக்கும் செய்யூர்; குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவுக்கு பக்திமய வரவேற்பு

“Manju”

செய்யூர்: செய்யூரின் தெளிவான வானம் நேற்று முதல் மழை மேகங்களால் நிரம்பியுள்ளது. குருக்களும் அது நன்மைக்காகவே! அப்படித்தான் இருக்கும் என்றார்கள். செய்யூர் கிளை ஆசிரமத்தில் நடக்கும் ஒவ்வொரு ஆன்மிக காரியங்களின் செயல்பாடுகளில் சேவை புரிய சுபமங்களத்தைக் குறிக்கும் இயற்கையின் கொடையாம் மழையும் எங்களுடன் கூட இணைந்தது.

குருவை வரவேற்க பல ஆண்டுகளாக செய்யூரின் குருபக்தர்களின் காத்திருப்பு மற்றும் பிரார்த்தனை என்றே கூறலாம். குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவின் சென்னை யாத்திரையானது அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றியது.

சிஷ்ய பூஜிதா நேற்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 5, 2024) சென்னையை வந்தடைந்தது முதல், ஒவ்வொரு குருபக்தர்க்குள்ளும் எல்லையில்லா மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. இன்று செய்யூருக்கு வரும் குருவை வரவேற்க மக்கள் அதிகாலை முதலே ஆசிரமத்திற்கு வரத் தொடங்கினர். குருவின் வாகன அணிவகுப்பு மதியம் 1 மணியளவில் செய்யூர் பகுதியைச் சென்றடைந்தது.

உலகிலேயே இதுவரை எந்த ஆச்சாரியரும் வழங்கிடாத வகையில், குருவை வரவேற்க, உள்ளூர் மக்களும் சேர்ந்து பக்தர்களுடன் இணைந்ததால், சிஷ்ய பூஜிதாவுக்கு செய்யூர் பக்தர்களும், உள்ளூர் மக்களும் அளித்த வரவேற்பு வேறொரு சரித்திரம் ஆனது.

குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவை செய்யூர் சந்திப்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

சந்நிதியில் இருந்து சிறிது தொலைவில் உள்ள கிளைக் கோயில் வரை செல்லும் சாலை, வண்ணக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. செய்யூரில் இருந்து தொடங்கிய வரவேற்பு ஊர்வலம் இன்று வரை இந்த நாடு கண்டிராத கொண்டாட்ட நிகழ்வாக மாறியது. வரவேற்புக்கு நாதஸ்வர மேளமும் மயிலாட்டமும் சிறப்பாக இருந்தது. வாத்தியங்களுக்குப் பின்னால் மக்கள் பிரதிநிதிகளும், ஊர்மக்களும் அணிவகுத்து நின்றனர். அதன் பின்னால் சந்நியாசி சந்நியாசினிகளும் வர, அதன் பிறகு குருவின் வாகனம் வலம் வந்தது. ஊர்வலம் ஆசிரம வாயிலைக் கடந்தவுடன், நிறைவான மந்திர மொழிகள் நிரம்பி வழிந்தது. அதைத் தொடர்ந்து ஆன்மீக விழாக்கள் விவரிக்க முடியாத அளவிலும் சுயம் – உணர்ந்து தியானிக்கும் அருள் நிறைந்தவையாகவும் இருந்தது.

Related Articles

Back to top button