IndiaLatest

சாந்திகிரி ‘மக்கள் நலம்’ இலவச சித்த மருத்துவ முகாம் செய்யூரில் தொடங்கியது

“Manju”

.சென்னை: திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சித்தா இணைந்து நடத்தும் ‘மக்கள் நலம்’ மருத்துவ முகாம் சாந்திகிரி செய்யூர் கிளை ஆசிரமத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் மருத்துவ முகாமை முன்னிட்டு, சுமார் 3,000 வீடுகளுக்குச் சென்று சாந்திகிரி சித்த மருத்துவ மாணவர்களால் சுகாதாரக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தப்பட்டது. சாந்திகிரி சித்தா கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே.சௌந்தரராஜன், டாக்டர். ஜனனி ஷ்யாமரூப ஞான தபஸ்வினி, டாக்டர் ஜனனி அனுகாம்பா ஞான தபஸ்வினி, டாக்டர் ஜே. நினப்ரியா, டாக்டர் ஆர். புவனேந்திரன், Dr.பிரகாஷ்.SL, Dr.பாஸ்கர்.எஸ் மற்றும் டாக்டர் .கலைசெல்வி பாலகிருஷ்ணன் மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் நிபுணர்களும் முகாமில் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சை பரிந்துரைகளை வழங்குவார்கள்.

முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. மருந்துகளும் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. 50க்கும் மேற்பட்ட சித்த மருத்துவப் பயிற்சி மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இம்முகாமில் பங்குபெற செய்யூர் வந்திருந்தனர்.

 

Related Articles

Back to top button