India

குருவினோடு நிலைத்து நிற்றல்

“Manju”

கூடலூர்: ஆரம்பகால குரு பக்தர்களின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும்போது டாக்டர். ஜி. கே. பத்ராக்ஷன் மற்றும் அவரது மனைவி டாக்டர். ஆர். மந்தையம்மாள் ஆகியோரது பெயர்கள் கவனிக்கப்படாமல் போக வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் கூடலூர் பாகத்தில் பலகாலமாக இந்த குடும்பம் தான் ஆசிரமத்தின் செயல்பாடுகளை இயக்கி வந்தது.

1943இல் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் என்னும் இடத்தில் பிறந்த ஹோமியோபதி மருத்துவர் ஆகிய டாக்டர் பத்ராக்ஷன் கல்யாணம் செய்துகொண்டது, மதுரையில் பிறந்து வளர்ந்த மந்தையம்மாள் அவர்களை ஆகும். இரு குடும்பமும் பாரம்பரியமாக வைத்தியத்தை தொழிலாக கொண்டவர்கள். சித்த வைத்தியத்தில் நீண்ட அனுபவம் பெற்ற மந்தையம்மாள் உடன் ஜி. கே. எம். கிளினிக் என்ற பெயரில் ஒரு மருத்துவமனையை கூடலூரில் டாக்டர் பத்ராக்ஷன் ஆரம்பித்தார். பல நோயாளிகளுக்கு இவர்கள் நிவாரணம் தந்தனர். மதுரை மெடிக்கல் அசோசியேஷன், தமிழ்நாடு சித்தா மெடிக்கல் கவுன்சில், சென்னை ஐ. எம். பி. சி. ஓ. பி. எஸ், தமிழ்நாடு போர்டு ஆஃ இந்தியன் மெடிசின், தமிழ்நாடு ஹோமியோ மெடிக்கல் கவுன்சில், சென்ட்ரல் போர்டு ஆப் இண்டிஜீனியஸ் மெடிசின், சென்னை. முதலான பல கழகங்களில் நிரந்தர உறுப்பினராக இருந்தவர்தான் டாக்டர் பத்ராக்ஷன். தேனி மாவட்டம் அரசு பதிவுபெற்ற மருத்துவர்களின் கூட்டமைப்பிற்கு தலைமை இயக்குனராகவும், ஆம் ஆத்மி கட்சியின் மருத்துவ பிரிவில் பகுதி தலைவராகவும் டாக்டர் மந்தையம்மாள் செயல்பட்டு இருந்தார்.

சாந்திகிரியின் பாதையில் மறக்க இயலாத ஒரு பாகம்தான் கூடலூரும் சுருளியும். கூடலூரில் உள்ள குரு பக்தர்களின் வேண்டுதலை ஏற்று, குரு அங்கே ஒரு முறை சென்று இருந்தார். மிக சிறிய அளவில் ஒரு ஆசிரமம் அங்கே உருவாக்கப்பட்டது. 1979 மார்ச் மாதம் டாக்டர் பத்ராக்ஷன் மற்றும் அவரது குடும்பமும் கூடலூர் ஆசிரமத்தில் வைத்து குருவினை கண்டனர். சிறிது நாட்கள் சென்ற பின் அங்கே இருந்த ஆசிரமம் மறைந்து விட்டது. ஆரம்ப காலத்திலேயே இவ்வாறு நிகழும் என்று குரு அறிவித்திருந்தார். சிலர் சேர்ந்து ஒரு உத்வேகத்தில் ஆரம்பித்த ஒன்று தான் அது. அந்த இடத்தையும் பின்னர் அவர்கள் விற்று விட்டனர். குருவினை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்து அங்கே நிறுவிய குருவின் புகைப்படமும் பின்னர் அவர்களால் ஆற்று நீரில் விடப்பட்ட மிக வேதனையான நிகழ்வும் அங்கே நிகழ்ந்து இருந்தது.

குரு தான் தங்களை நிலைநிறுத்தி வைத்திருந்ததும் நிலை நிறுத்தி வைத்துக் கொண்டிருப்பதும் என்று இந்த குடும்பம் நம்புகின்றது. 2017 ஜனவரி 31ஆம் நாள் டாக்டர் பத்ராக்ஷன் மறைந்தார். 2020 அக்டோபர் 5ஆம் நாள் அவரது மனைவியாகிய டாக்டர் மந்தையம்மாள் மறைந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.

டாக்டர் பிரபு. பி, கவிதா, டாக்டர் ஜனப்ரியா, டாக்டர் ரிஷிகுமார் என்பவர்கள் இவரது பிள்ளைகள். டாக்டர் ஜெகதீஸ்வரி, சபரிநாதன், டாக்டர். கோபி சேகர் என்போர் மருமக்கள், எஸ்.உலகநாதன், எஸ். மேகநாதன், பி.குருபிரணவ், குரு மித்ரன்.ஜி என்போர் பேரப்பிள்ளைகள். டாக்டர் பத்ராக்ஷன் மற்றும் டாக்டர் மந்தையம்மாள் தம்பதியினருக்கு சாந்திகிரி நியூஸ் அஞ்சலி செலுத்துகின்றது.

Related Articles

Back to top button