IndiaLatest

பசியற்ற சாதி, மத வேறுபாடில்லா சமுதாயமே ஶ்ரீ கருணாகர குருவின் தத்துவச் சிந்தை – தமிழக சபாநாயகர் திரு. M. அப்பாவு

“Manju”

செய்யூர்: சாந்திகிரி ஆசிரம நிறுவனர் நவஜோதி ஸ்ரீ கருணாகர குருவின் தத்துவச் சிந்தை ஜாதி, மதம் இல்லாத சமுதாயம் என்றும், குரு முன்வைத்த தத்துவப்பாதையில் மனிதனாகப் பிறந்த அனைவரும் இணைந்து பயணிக்கலாம் என்றும் தமிழக சபாநாயகர் திரு.மு.அப்பாவு கூறினார்.

சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற அறிவிப்பு கூட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றளவும் உலகில் ஆச்சாரியர்களின் போராட்டம் சமூக மாற்றத்திற்காகவே இருந்து வருகிறது. ஜாதி பாகுபாட்டை ஒழிக்க தமிழகமும், கேரளாவும் இணைந்து செயல்பட்ட பல சம்பவங்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாகவும் அதில் ஒன்றுதான் வைக்கம் சத்தியாகிரகம் என்றும் கூறினார்.

சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசகர் கே.எஸ். பணிக்கர் தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில்
செங்கல்பட்டு துணை ஆட்சியர் அ. லலிதா எம்.இ., சாந்திகிரி ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி, சுவாமி ஸ்நேகாத்மா ஞான தபஸ்வி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், செய்யூர் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் திவாகர் ராமன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.யு. சத்யா, ஓமன் மத்திய கிழக்கு பல்கலைக்கழகத்தின் துறை முதன்மையர் டாக்டர்.ஜி.ஆர். கிரண், செய்யூர் அரசு. மேல்நிலை ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கே. நம்பிராஜன், செய்யூர் முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் டி.பாபு, எஸ். சபீர் திருமலை, ஆலோசகர், தகவல் தொடர்பு பிரிவு, சாந்திகிரி ஆசிரமம், இளங்கோவன், செய்யூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பி.நாகராஜ், செய்யூர் பார் கவுன்சில் தலைவர் Adv. சந்தானம், காஞ்சி மக்கள் மையம் தலைவர் Adv. ஈ. கண்ணன், என் நவநீத் கோபாலகிருஷ்ணன், Adv. செல்வி ராஜேஷ் ஆகியோர் உரையாற்றினார்கள். செய்யூர் கிராம ஊராட்சி துணைத் தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் வரவேற்புரையாற்றினார், முதுநிலை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.பூபதி நன்றி கூறினார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 7, 2024) காலை 9 மணிக்கு, குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா பிரார்த்தனை மண்டபம், கல்வி வளாகம் மற்றும் சாந்திகிரி ஒருங்கிணைந்த கிராமத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

காலை 11 மணிக்கு வெள்ளி விழா மாநாட்டை அமைச்சர் திரு.மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். செய்யூர் எம்.பி. திரு. ஜி.செல்வன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கேரள மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர். அனில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ‘மக்கள் நலம் ‘ ; மருத்துவ முகாம்களை நடிகர் திரு. தலைவாசல் விஜய் தொடங்கி வைக்கிறார். பணியூர் பாபு எம்.எல்.ஏ சிறப்புரையாற்றுகிறார். விழாவில் சுவாமி சைதன்யா, சுவாமி நிர்மோகாத்மா, சுவாமி குருரத்தினம், சுவாமி சிநேத்மா, பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் சென்னை ஆர்ச்டியோசீஸ் பேராயர் டாக்டர். சாமுவேல் மார் தியோபிலிஸ், சகோதரி ஜான்சி (பிரம்மகுமாரிகள்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாலை தீபஒளி விளக்கேற்றலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

செய்யூ சாந்திகிரி கிளை ஆசிரமத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியை அறிவிப்பு செய்து, தமிழக சபாநாயகர் மு. அப்பாவு விலாவினைத் தொடங்கி வைக்கிறார்.

Related Articles

Back to top button