LatestThiruvananthapuram

ஒற்றுமையின் செய்தியை சாந்திகிரி வழங்குகிறது – கேரள ஆளுநர்

“Manju”

போத்தன்கோடு:(திருவனந்தபுரம்) ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமை என்ற செய்தியை சாந்திகிரி தருகிறது என்றும், ‘மனித சேவையே கடவுளின் சேவை’ என்ற கருத்தின் அடிப்படையில் ஆசிரமத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும் மேதகு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறினார். சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற 97வது நவபூஜித விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றினார். மதம் ஒரு அனுபவம்; அறநெறி மதத்தின் அடிப்படையாகும், மேலும் உலகளாவிய சகோதரத்துவம் ஞானிகளால் முன்வைக்கப்பட்ட ஆன்மீகத்தின் அடித்தளமாகும். அந்த பாரம்பரியமாக சாந்திகிரி திகழ்கிறது என்றார் கவர்னர். நவஜோதிஸ்ரீ கருணாகர குரு உலகிற்கு ஆன்மீக மாற்றத்திற்கான புதிய பாதையைத் திறந்து வைத்தார். குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அமிர்த ஞான தபஸ்வினி மூலம் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான குருவின் செய்தி இன்று உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் ஆளுநர் கருத்து தெரிவித்தார்.

கவர்னர் ஆசிரமத்தை அடைந்து தாமரை பர்ணசாலாவில் மலர்களை அர்ப்பணித்தார் . அவரது பேச்சு மலையாளத்தில் தொடங்கியது. அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் வாழ்த்துகளை ஆளுநர் தெரிவித்தார். ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, இணை செயலாளர் சுவாமி நவநன்ம ஞான தபஸ்வி ஆகியோர் உரையாற்றினர். வேதிக் அகாடமியின் ஓணக்கோடியை (ஓணம் சம்பிரதாய முறை உடை) ஆளுநரிடம் எம்ஜி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாபு செபாஸ்டியன் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் சங்கமான ‘ஆக்ட்ஸ்’ அமைப்பின் செயலாளர் ஜார்ஜ் செபாஸ்டியன் ஆகியோர் வழங்கினர்.

Related Articles

Back to top button