IndiaLatest

சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரியில் ‘அத்வய 2k23’க்கு நாளை ஆரம்பம்

“Manju”

 

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): இளைஞர்களின் கலை மற்றும் திறன் வெளிப்பட சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் 2023 டிசம்பர் 13 புதன்கிழமை ஆர்ட்ஸ் ஃபெஸ்ட் ஆரம்பமாகும். சாந்திகிரி ஹெல்த் கேயர் & ரிசர்ச் ஆர்கனைசேஷன் தலைமை ஸ்வாமி குருசவித் ஞான தபஸ்வி கலை விழாவிற்கு துவக்கம் குறிக்கிறார். கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.கே.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெறும் விழாவில் துணை முதல்வர் டாக்டர்.பி.ஹரிஹரன், டாக்டர்.ஜி.மோகனாம்பிகை, மருத்துவக்கல்வி பிரிவு ஏ.ஜி.எம்.விஜயன்.எஸ், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்தோஷ். பி, ஹன்ஸ்ராஜ் ஜி. ஆர் முதலானோர் பங்கு பெறுகிறார்கள்

டிசம்பர் 14 வியாழன் முதல் 17 வரை விளையாட்டுப் போட்டிகள் 18 ந் தேதி திருவனந்தபுரம் பல்கலைக்கழக விளையாட்டு வளாகத்தில் வருடாந்திர அட்லடிக் மீட் நடைபெறும். ‘அத்வய 2k23’ என்ற பெயரில் நடைபெறும் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் ஃபைன் ஆர்ட்ஸ் தலைமை டாக்டர்.விஏ.மேகலா, விளையாட்டு இயக்குனர் பினோத் மற்றும் பதினேழாவது பேட்ச் பி.எஸ்.எம்.எஸ். மாணவர்கள் யூனியனின் தலைமையில் நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்களை நான்கு தொகுப்புகளாக பிரித்து போட்டிகள் நடைபெறும். கலை மற்றும் விளையாட்டு போட்டிகளின் இறுதி பாகமாக கல்லூரி தினம் விழா நடக்கும்.

Related Articles

Back to top button