IndiaLatest

மனித உடற்கூறியல் குறித்து தேசிய அளவிலான “வினாடி வினா” போட்டி

“Manju”

 

போத்தன்கோடு: கன்னியாகுமரி ஆயுஷ் கிளப் சார்பில், மனித உடற்கூறியல் குறித்த தேசிய அளவிலான வினாடி-வினா போட்டி, சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. மருத்துவ மாணவர்களிடையே உடற்கூறியல் அறிவை வளர்க்கும் வகையில் சுகாதாரத்துறையில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்றைய நாளில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். உடற்கூறியல் துறை பேராசிரியர் Dr.G.மோகனாம்பிகை, உதவிப் பேராசிரியர் Dr. வனிதா .M ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறுபவர்கள், ஜனவரி 15-ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள ஆயுஷ் ஹெல்த் மேளாவில் நடைபெறவிருக்கும் அடுத்த சுற்றுப் போட்டியில் பங்கு பெறலாம். அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இறுதிச் சுற்று போட்டியில் பங்குபெறலாம். அதிக மதிப்பெண் பெறுப வர்களுக்கு ரொக்கப்பரிசும், மொமெண்டோவும் வழங்கப்படும். கல்லூரி அளவிலான இப்போட்டியில் வெற்றி பெறுப வர்களுக்கு ஊக்கப் பரிசும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று ஆயுஷ் கிளப் ஒருங்கிணைப்பாளர் Dr.R.J.பிவின் அறிவித்துள்ளார்.

Related Articles

Back to top button