IndiaLatest

சாந்திகிரியின் ‘மக்கள் நலம்’ மருத்துவ முகாம் செய்யூரில் இன்று துவங்கியுள்ளது

“Manju”

 

சென்னை: இருபத்தைந்து ஆண்டுகாலமாக தமிழகத்தில் செயல்படுத்தி வரும் தன் சேவையின் நிறைவைத் தொடும் சாந்திகிரி ஆசிரமத்தின் புதிய சேவைத் திட்டம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தொடங்கப்படவுள்ளது.

சாந்திகிரி ஆசிரமத்தின் “மக்கள் நலம்” என்பதன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் இலவச சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என ஆசிரம பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி தெரிவித்தார். இந்தியாவின் தனிச்சிறப்பு மருத்துவமான சித்தவைத்தியத்தை உலகளவில் முன்னெடுத்துச் செல்லும் இயக்கம் சாந்திகிரி என்றும், இந்த சுகாதாரத் திட்டம் திராவிட மண்ணுக்கு சாந்திகிரியின் புத்தாண்டுப் பரிசு என்றும் சுவாமி கூறினார். திருவனந்தபுரம் போத்தன்கோட்டில் ஆசிரம நிறுவனர் நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் வழிகாட்டுதலின்படி தொடங்கப்பட்ட சித்த மருந்து தொழிற்சாலை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது. பாரம்பரிய முறையிலும், முற்றிலும் அறிவியல் முறையிலும் சித்த மருந்துகளைத் தயாரிக்கும் மருந்துத் தொழிற்சாலையும், சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்) ஆங்கிலத்தில் கற்றுத் தரும் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியும் ஏற்கனவே உலக கவனத்தைப் பெற்றுள்ளன என்றார் சுவாமி.

குழந்தைகளுக்கான மருத்துவ முகாமை பிரபல நடிகர் தலைவாசல் விஜய் தொடங்கி வைக்கிறார். முகாமை முன்னிட்டு, சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சித்தா இணைந்து ஜனவரி 2-ம் தேதி முதல் சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்படும். வரும் 7ம் தேதி நடைபெறும் முகாமில் பொது மருத்துவம் பற்றிய சிறப்பு கலந்தாய்வு பிரிவு அமைக்கப்படும். வர்மம் சிறப்பு மருத்துவம், அறுவை சிகிச்சை, சூல் மகளிர் மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம், தோல் நோய்கள், எலும்பு மற்றும் மூட்டு வேதனை நோய்களுக்கான சிறப்பு ஆலோசனையும் நடைபெறும். மருத்துவ பரிசோதனை மட்டுமின்றி மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும். கல்லூரி முதல்வர் டாக்டர் டி.கே. சௌந்தரராஜன் மற்றும் துணை முதல்வர் டாக்டர் பி. ஹரிஹரன் ஆகியோரின் தலைமையிலான நிபுணர்கள் அடங்கிய குழு இம்முகாமை நடத்துகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். அன்று காலை 8 மணிக்கு மருத்துவ பரிசோதனைக்கான முன்பதிவு தொடங்கப்படும்.

வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சாந்திகிரி ஆசிரமம் செய்யூர் கிளையில் ஜனவரி 7, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முதல் மருத்துவ முகாமில் 2000க்கும் மேற்பட்டோருக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.

செய்யூர் கிளை ஆசிரமத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுவாமி மனுசித், சுவாமி ஆனந்தஜோதி, சுவாமி மதுரநாதன், சுவாமி சித்தசுத்தன், சுவாமி முக்தசித்தன், சாமி சத்தியசித், சுவாமி பக்ததத்தன், சுவாமி சாயூஜ்யநாத், சுவாமி ஜோதிர்பிரகாச, ஜனனி பிரார்த்தனா, ஜனனி சாந்திபிரபா, ஜனனி மங்களா, டாக்டர் ஜி.ஆர். கிரண், சபீர் திருமலை, கே.எஸ்.பணிக்கர், Adv. ராஜேஷ், சந்தோஷ் குமார், விஜயன்.எஸ். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button