IndiaLatest

‘இது நம்ம ஊரு வைத்தியம்’ : ‘மக்கள் நலம்’ திட்டத்தின் சுகாதார கணக்கெடுப்புக் கள ஆய்விற்கு முழு ஒத்துழைப்புடன் செய்யூர் மக்கள்

“Manju”

செய்யூர்: சென்னை சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, திருவனந்தபுரம் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைப் பயிற்சி நிபுணர்கள் நடத்திய சுகாதாரக் கள ஆய்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

ஜனவரி 2-ம் தேதி செய்யூர் கிராமப்புறங்களில் சுகாதார நலக் கணக்கெடுப்பிற்கான கள ஆய்வு தொடங்கியது. பத்து பேர் கொண்ட குழு ஒவ்வொரு கிராமமாகச் சென்று, சுகாதாரத் தகவல்களைக் கேட்டு, சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை அளித்து, ஜனவரி 7-ம் தேதி நடக்கவிருக்கும் இலவச சித்த மருத்துவ முகாமுக்கு அழைப்பு விடுத்தனர் . வீடு வீடாகச் சென்று நலம் விசாரிக்கும் மருத்துவர்களின் வருகை கிராம மக்களுக்கு நிம்மதியை அளித்தது. இவர்கள் சித்த மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் என்பது தெரிந்ததால், ‘இது நம்ம ஊரு வைத்தியம்’ என, ஊர் தலைவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

மூன்றாம் நாளின் சிறப்பு அம்சம் என்னவென்றால், கள ஆய்வுக் குழு மருத்துவ மாணவர்களை அருகில் உள்ள பள்ளியின் குழந்தைகள் வகுப்பு எடுக்க வருமாறு அழைத்தனர். எனவே, குப்பம் பரமக்கேணி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு டாக்டர்.பிரகாஷ்.எஸ்.எல். மற்றும் டாக்டர் எஸ்.பாஸ்கரன் = குழு தலைமையில் சுகாதார கல்வி குறித்த பாடம் நடத்தப்பட்டது. செய்யூர் அருகே கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் சுகாதார நலக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று டாக்டர் ஜே.நினப்ரியா தெரிவித்தார்.

Related Articles

Back to top button