LatestThiruvananthapuram

சாந்திகிரி முன்வைக்கும் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகம்: வழக்கறிஞர் ஏ. ரஹீம்.

“Manju”

போத்தன்கோடு: சாந்திகிரி என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகத்தை எடுத்துரைக்கிறது. குருவின் செய்தி இடையே கடந்து செல்லும் போது, குரு பரம்பரையில் நிறைந்து நிற்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகம் என்ற விஷயத்தை தான் காண்கிறோம் என வழக்கறிஞர் மற்றும் மக்களவை உறுப்பினர் ஏ. ரஹீம் சுட்டி காட்டினார். சாந்திகிரி ஆசிரமத்தில் பூஜிதா பீட சமர்ப்பண விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றினார்.
மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீகத்தின் திருவொளியை
நவஜோதி ஸ்ரீகருணாகரகுரு உலகின் முன் உணர வைக்க செயலாற்றினார் என்றும், இந்த உலகம் எதிர்கொள்ளும் பேரிடர்களுக்கும் பிரிவினை சக்திகளையும் கடுமையான பிரச்சினைகளுக்கும் தீர்வாக தான் குரு காட்டும் நல்வழி நன்மையுடைதும் மானிட அன்பின் செய்தி என்று அவர் எடுத்துரைத்தார்.

சாந்திகிரி எந்த ஒரு பிரிவு மற்றும் எல்லைகள் இல்லாமல் செயல்படுவது அதன் சிறப்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சாந்திகிரியில் அங்கம் வகிப்பதுதான் சாந்திகிரியின் மிகப்பெரிய பலம் என்றார்.
அடூர் பிரகாஷ் எம்.பி., துவக்கி வைத்த விழாவில், அரசியல், சமூக, கலாசாரத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Related Articles

Check Also
Close
Back to top button