IndiaLatest

தினை உணவை தயாரித்து காட்சிப்படுத்தியதற்காக கல்லூரி பிரிவில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

சித்த மருத்துவம் படிக்கும் மாணவி எஸ். திவ்யா முதல் பரிசு பெற்றபோது.

“Manju”

 

 

திருவனந்தபுரம்: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், கேரள அரசு மற்றும் CSSIR- தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய “சிறுதானிய உணவு திருவிழா” நேற்று (08.09.2023) வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மாநில சுகாதார அமைச்சர் திருமதி. வீணா ஜார்ஜ், திருவனந்தபுரம் பாப்பனம்கோட்டில் உள்ள CSSIR-National Institute for Interdisciplinary Science & Technology Campus (NIST Campus) – ல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, தினையின் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் பயன்பாட்டை ஊக்குவிக்க வகுப்புகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உடல்நலக் குறைபாடுகளுக்கு தினையின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தினை – நமது உடலை வளர்ப்பது மற்றும் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் என்ற கருப்பொருளில் கையால் செய்யப்பட்ட சுவரொட்டி போட்டி, தினையால் செய்யப்பட்ட சுவையான உணவுப் பொருட்களின் கண்காட்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் வினாடி – வினா போட்டி என சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டனர். 18வது தொகுதி (இறுதியாண்டு) மாணவி குமாரி.எஸ்.திவ்யா, தினைகளான ராகி மற்றும் தினையை பயன்படுத்தி ராகி லட்டு, ராகி கட்லெட் மற்றும் தினை முருக்கு தயாரித்து, காட்சிப்படுத்தி கல்லூரி பிரிவில் முதல் பரிசு பெற்றார். ராகி கொழுக்கட்டை மற்றும் ராகி முளை தோரண் இவற்றைத் தயாரித்து காட்சிப்படுத்திய 18வது தொகுதி (இறுதி ஆண்டு) மாணவர் ஆர்.ஆனந்த் கிருஷ்ணா, சம்பா பாயசம், சம்பா உப்புமா இவற்றைத் தயாரித்து காட்சிப்படுத்திய 21வது தொகுதி (முதல் ஆண்டு) மாணவி குமாரி. எம்.மைலா ஆகியோருக்கு பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இத்தனுடன் கையால் செய்யப்பட்ட போஸ்டர் பிரசண்டேஷனில் 21வது பேட்ச் (முதல் ஆண்டு) மாணவி குமாரி.டி.ஜே.அக்ஷயா மற்றும் 18வது பேட்ச் (இறுதியாண்டு) மாணவிகளான குமாரி.எப்.சுமையா யூசுப், குமாரி.எஸ்.திவ்யா, குமாரி.யு.அர்ச்சனராஜ், ஆர்.எஸ்.கௌரிகிருஷ்ணா ஆகியோர் வினாடி – வினா போட்டியில் கலந்து கொண்டனர். பங்கேற்புச் சான்றிதழும் பெற்றனர். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக இந்த “சிறுதானிய உணவு திருவிழா”வின் ஒருங்கிணைப்பாளரும் மருத்துவ தாவரவியல் பிரிவு குணபாடம் மருந்தியல் துறை இணைப் பேராசிரியருமான வி.ரஞ்சிதா, இது ஒரு பயனுள்ள மற்றும் தகவல் தரும் நிகழ்ச்சி என்று கூறினார். நிகழ்ச்சிக்கு, நுண்ணுயிரியல் துறை உதவிப் பேராசிரியை ஸ்மிதா ஷாமோலினா, மருந்தியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர்.வி.ராஜேஸ்வரி, லேப் டெக்னீசியன் எஸ்.சாஜு, ஜி.மஞ்சுளா, மற்றும் பி.ஆர்.அருண் உட்பட 15 பேர் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button