IndiaLatest

வெள்ளி விழாவை முன்னிட்டு செய்யூர் ஆசிரமத்தின் சமையல் அறை கலை கட்டுகிறது

“Manju”

சென்னை: சாந்திகிரி ஆசிரம சென்னை கிளையில் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்காக சமையல் அறை தயார் நிலையில் உள்ளது. சாந்திகிரி ஆசிரமத்தின் பல்வேறு கிளைகளில் இருந்து அனுபவம் வாய்ந்த சமையலர்கள் உணவு சமைக்க வந்துள்ளனர். இப்போது சென்னையின் சாம்பார், ரசத்துடன் மலையாள தேசத்தின் சாம்பார், ரசமும் ஒன்றிணைந்த கலவையாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சென்னை செய்யூர் ஆசிரமத்தில் கிடைக்கும். இவ்வெள்ளி விழா கொண்டாட்டம் செய்யூர் மக்களுக்கு மலையாள தேசத்தின் புதிய சுவையை சுவைத்து ரசிக்க வாய்ப்பளிக்கிறது. சமையலுக்காக சாந்திகிரி ஆசிரமத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் சமையல்காரர்கள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவாமி முக்தசித்தன் ஞானதபஸ்வி உணவு ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் ஆவார்.  ஜனவரி 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க உணவுகள் நிறைந்து காணப்படும். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கும் இரண்டு நாட்கள் தமிழ் பண்பாட்டு உணவை அருந்துவது என்பது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.  இப்புனித பயணத்தைத் தொடர்ந்து ஜனவரி 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

Related Articles

Back to top button