IndiaLatest

குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா வயநாடு வந்தடைகிறார் ; சாந்திகிரி பிரார்த்தனையால் நிறைந்த நிலை

“Manju”
குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா வயநாடு வந்தடைகிறார் ; சாந்திகிரி பிரார்த்தனையால் நிறைந்த நிலை

சுல்தான் பத்தேரி: சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா இன்று வயநாடு வரும்போது நம்பியார்குன்று ஆசிரமம் பிரார்த்தனை மையமாக மாறும். சிஷ்ய பூஜிதா இங்கு முன்னதாக ஜூன் 2005ல் விஜயம் செய்திருந்தார். குருஸ்தானியா சாந்திகிரியின் ஆன்மிக விஷயங்களின் அனைத்துமாக செயல் படுகிறார். நவஜோதிஸ்ரீகருணாகரகுரு சாந்திகிரி பரம்பரையை வழிநடத்த குருஸ்தானத்தில் எப்போதும் ஒருவர் இருப்பார் என்று கூறியுள்ளார். ஜாதி, மத வேறுபாடின்றி போத்தன்கோடு ஆசிரமத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிஷ்ய பூஜிதா வழிகாட்டியும் மற்றும் ஆறுதல் அளிக்கிறார். அரிதான சந்தர்ப்பங்களில், மிக முக்கியமான அத்தியாவசியமான யாத்திரைகள் மட்டுமே ஆசிரமத்தின் வெளியே பயணிக்கிறார் .

இவர் 1961 ஆம் ஆண்டு இடுக்கி மாவட்டத்தில் உள்ள கல்லார் பட்டம் காலனியில் காலஞ்சென்ற செல்லப்பன் பிள்ளை மற்றும் ரத்னம்மா ஆகியோரின் நான்கு பிள்ளைகளில் மூத்தவராகப் பிறந்தார். பூர்வாசிரமத்தில் பெயர் ராதா. ஒன்பது வயதில் ஆசிரமத்தில் நிரந்தரமாக தங்கத்துவங்கினார் . 1984ல் குருவிடம் சன்னியாச தீட்க்ஷை பெற்று குரு தர்ம பிரகாச சபையில் உறுப்பினரானார்.

மே 6, 1999 அன்று, நவஜோதிஸ்ரீகருணாகரகுருவின் ஆதிசங்கல்பத்திற்குப் பிறகு சாந்திகிரியின் ஆன்மீகத் தலைமையாக உயர்ந்தார். பல சன்னியாசிகள் சிஷ்ய பூஜிதாவால் தீட்க்ஷை பெற்று குரு தர்ம பிரகாச சபையில் உறுப்பினர்கள் ஆகியுள்ளனர் . , அவர் ஒரு வியாழன் சுழற்சி கால அளவிற்கு அப்பாற்பட்டு குருவின் வழிகாட்டுதலின் கீழ் சாந்திகிரியை வழிநடத்துகிறார்.

சாந்திகிரியில் உலகப் புகழ் பெற்ற தாமரை சின்ன பர்ணசாலை சிஷ்ய பூஜிதாவின் தரிசனத்தால் மலர்ந்தது. ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி மற்றும் சுமார் 100 துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சிஷ்ய பூஜிதாவுடன் சுல்தான் பத்தேரிக்கு யாத்திரை செல்கின்றனர்.
இன்று (04/03/2023) மாலை 6 மணிக்கு நம்பியார்குன்று சென்றடையும் சிஷ்ய பூஜிதாவை சன்னியாசிகள், குரு பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வரவேற்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல சோபனா இசைக்கலைஞர் ஹரிகோவிந்தனின் இசையும் இடம்பெறும்.

ஆசிரமத்தை அடையும் சிஷ்ய பூஜிதா குரு சன்னதியில் இளைப்பாறுகிறார் . ஏப்ரல் 5ம் தேதி காலை 9 மணிக்கு பிரார்த்தனை மண்டபத்தில் பிரதிஷ்டா பூர்த்திகர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் பழங்குடியினக் கலைகளின் பின்னணியில், சபதங்களால் மனதையும் உடலையும் அர்ப்பணித்த நூற்றுக்கணக்கான ஆத்ம உறவினர்களின் எழும் தொடர் அகண்ட நாம மந்திரங்களுடன் பிரார்த்தனை சூழலில் அர்ப்பணிப்பு நடைபெறுகிறது. விழா முடிந்ததும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு சிஷ்ய பூஜிதா தரிசனம் கிடைக்கப்பெறும் .

துடிதாளம் கோத்ரகலாசங்கம் நடத்தும் பழங்குடியினரின் நடனங்கள் மற்றும் பாடல்களால் ஆசிரம சூழல் கலகலக்கும். பனியன்கள், காட்டு நாய்க்கன்கள், உரலிக்குருமான்கள் ஆகியோரின் வட்டக்கலிகளும் கொல்கலிகளும் அரங்கேறும். பழங்குடியினரின் சிலிர்ப்பூட்டும் ஓசை தாளமும் இசைப் பரவசத்தைப் பரப்பும்.

அன்றைய தினம் நடைபெறும் நட்புறவு சந்திப்பில் அரசியல், சமூக, கலாசாரத் துறைகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள். இந்த விழாவில் பல்வேறு துறைகளில் தன்னலமற்ற சேவைகளை ஆற்றிய நபர்கள் மற்றும் ஆசிரமத்தின் ஆரம்பகால பணியாளர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். இந்நிகழ்ச்சியில், தேவைப்படும் பழங்குடியின குடும்பங்களுக்கு அன்றாடத் தேவை பொருட்கள் விநியோகிக்கப்படும். மாலை 6 மணிக்கு தீபபிரதட்சிணை நடைபெறும். இரவு 8 மணிக்கு பாரம்பரிய இசைக்கருவிகளுடன் பாச திருவிழாவாக மியூசிக் ஃப்யூஷன், கலை நிகழ்ச்சிகள் அரங்கேறும். பழங்கால பழங்குடி கட்டிடக்கலையின் வசீகரம் மற்றும் பளபளக்கும் கட்டுமானங்கள் நம்பியார்குன்றினை பழைய காலத்தின் எளிமைக்கு கொண்டு செல்கின்றன. மண், மரங்களை அரவணைத்து செய்த ஏற்பாடுகள் – பழங்குடியினர் கிராமம் போன்ற கண்காட்சி அரங்கம், ஊர் பெரியவர் வீடு போன்ற இடம் – அனைத்தும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

Media Relations
94477 31357
92499 80244

Related Articles

Back to top button