IndiaLatest

சாந்திகிரி பெண்கள் அதிகாரம் பெற தேசிய பங்களிப்பு துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா

“Manju”
Inauguration of silver jubilee celebrations at Santhigiri Saket Branch

புது டெல்லி: பெண்கள் முன்னேற்றத்தில் பல பங்களிப்பு ஆற்றிய நிறுவனம் சாந்திகிரியென்று டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா கருத்துத் தெரிவித்தார். மேக் இன் இந்தியா என்ற பிரதமரின் வளர்ச்சிகழ்ச்சிப்பட்டத்துடன் சேர்ந்து பல இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சியின் புதிய வாழ்க்கைப் பாதையை ஒருங்கிணைத்து சாந்திகிரி செயல்பட்டதாக அவர் கூறினார். டெல்லியில் சாகேதில் செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் வெள்ளி விழாவின் திறப்பு விழா கூட்டத்தில் துணை நிலை ஆளுநர் இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தலைமை வகித்தார்.

கேரளாவில் புனித மாதமாக கருதப்படும் விருச்சிகம் என்று குறிப்பிடப்படும்
கார்த்திகை மாதத்தில் சாந்திகிரி ஆசிரமத்தில் பிராணப் பிரதிஷ்டை நடப்பது நமது சனாதன தர்மத்தின் கூடுதல் வலிமை மற்றும் உயர்வை குறிக்கிறது என்றும் அவர் கூறினார். ஆஸ்ரமம் பொதுச்செயலாளர் சுவாமி குருரத்னம் ஞானதபஸ்வியும் டெல்லி ஆஸ்ரமத்தின் தலைவர் ஜனனி பூஜா ஞானதபஸ்வியும் இணைந்து துணை  நிலை ஆளுநருக்கு நினைவு பரிசினை வழங்கினார்கள்.

ஆஸ்ரமம் தலைவர் ஸ்வாமி சைதன்ய ஞானதபஸ்வி, பொதுச் செயலாளர் ஸ்வாமி குருரத்னம் ஞானதபஸ்வி ஆகியோர் மான்மை தாங்கி கூட்டத்தில் பங்கேற்க, நொய்டா ஃபிலிம் சிட்டி சினிமா டெலிவிஷன் அகாடமி தலைவர் சந்தீப் மார்வா, ஆல் இந்தியா மலையாள அசோசியேஷன் தேசிய தலைவர் பாபு பணிக்கர், ஓமானில் மிடில் ஈஸ்ட் பல்கலைக்கழக டீன் டாக்டர்.ஜி.ஆர். கிரண், ஃப்ளாக் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் இயக்குநரும், அரசியல் விமர்சகர் ஆன தீபு நம்பியார், சிந்துரம் அறக்கட்டளையின் சபீர் திருமலை, டெல்லி மலையாள சங்கத்தின் தலைவர் ரகுநாத் கே., சாகேத் தர்ம சாஸ்தா ஆலயத்தின் பொதுச் செயலாளர் எம்.பி. சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.  சாந்திகிரி ஆஸ்ரமம் குருதர்மபிரகாச சபையில் டெல்லியில் இருந்து வரும் ஜனனி ஷாலினி ஞான தபஸ்வினி வரவேற்பும், ஆஸ்ரமம் ஆலோசனைக் குழு கம்யூனிகேஷன்ஸ் பிரிவு ஆலோசகர் ரஞ்சித் தேவராஜ் நன்றியும் நல்கிணார்கள்.

Inauguration of silver jubilee celebrations at Santhigiri Saket Branch

Related Articles

Back to top button