LatestThiruvananthapuram

சாந்திகிரி சித்தா கல்லுரியில் புது முதல்வர் பொறுப்பேற்ப்பு

“Manju”

திருவனந்தபுரம்(போத்தன்கோடு) : சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரியின் முதல்வராக பேராசிரியர். டாக்டர். டி.கே.சவுந்தரராஜன் பொறுப்பேற்றார் . பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் குழந்தை மருத்துவம் பட்ட மேற்படிப்பு துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற
பின்னர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள சாந்திகிரி சித்த மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணிபுரிய தேர்வு செய்யப்பெற்றார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். 1986ல் சித்த மருத்துவப் பட்டமும் 2001 இல் பட்ட மேற்படிப்பும் பாளையங்கோட்டை அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் பெற்ற பிறகு அதே கல்லூரியில் விரிவுரையாளராகவும் பின்னர் உப முதல்வராகவும் சேவை புரிந்தார் . 20 ஆண்டுகால சிகிச்சை அனுபவம் மற்றும் 16 ஆண்டுகால கல்வி பணியாற்றியும் சித்த சமூகத்தில் புகழ் பெற்றவர்.

இன்று (10/06/2023 சனிக்கிழமை) காலை 11.30 மணியளவில் சாந்திகிரி ஆசிரம ஆன்மிக தலைமை வகிக்கும் குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அவர்களை தரிசித்த பிறகு, சித்தா கல்லூரியின் நிர்வாக அலுவலகத்தில் அவர் முதல்வர் பொறுப்பேற்றார். கல்லூரி மேலாளர் அனைத்து ஆதரவுக்குரிய ஜனனி டாக்டர். நிச்சிதா ஞான தபஸ்வினி முதல்வருக்கு நியமன உத்தரவு வழங்க விழாவில் சாந்திகிரி ஹெல்த்கேயர் & ரிசர்ச் ஆர்கனைசேஷன் ஹெட் ஸ்வாமி குருசவித் ஞான தபஸ்வி, உப முதல்வர் டாக்டர்.பி. ஹரிஹரன், மருத்துவக் கல்விப் பிரிவு உதவி பொது மேலாளர் எஸ்.விஜயன், பேராசிரியர்கள் டாக்டர்.ஜி.மோகனாம்பிகை, ஷீஜ என், டாக்டர்.மேகல.வி, மற்றும் பி.ஆர்.ஓ.வேணுகோபால்.கே.சி. மற்ற பேராசிரியர்கள் மேலும் ஊழியர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button