LatestThiruvananthapuram

சாந்திகிரி ஆஸ்ரமம் சாகேத் கிளை : தெய்வீக விருப்பத்தின் மற்றொரு நிறைவு

“Manju”

சாந்திகிரி ஆஸ்ரமம் சாகேத் கிளையில் இன்று தீபம் ஏற்றப்பட்டது. காலை 7 மணக்கு அபிவந்திய சிஷ்யபூஜித பிரதிஷ்டை விழாக்கள் நிர்வகித்தார்.
சாந்திகிரி ஆஸ்ரமம் உலகத்திற்கு ஒரு புதிய பாதைக்கான வாக்குறுதி அளித்துள்ளது. பரப்பிரம்மத்தின் தானமாக இந்த பாதை அவதரித்துள்ளது. தெய்வீக இச்சையின் சம்பூர்ணத்துவுடன் தொடர்புடைய ஒரு பாதை. 1964ல் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திலள்ள ஒரு ஓலை மேய்ந்த குடிலில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. “லோக சமஸ்தா சுகினோ பவந்து” என்று சொல்லை மெய்ப்பிக்கும் விதமாக சாந்திகிரியின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது.
அனுபவங்களே சாந்திகிரியின் அடிப்படை. தரிசனம் மற்றும் உருவத்திலும் ஒளியிலும் தரும் வெளிப்பாடுகள் சாந்திகிரியை முன்னோக்கி வழிநடத்துகின்றன.
ஜீவனின் பாதையின் உற்பத்தி பிரம்மத்தில் இருந்து தொடங்கப்பட்டு பல்வேறு வாழ்க்கை நிலைகளின் வழியாக மனித நிலையை நோக்கி செல்கிறது. பின்னர் மனித ஜீவராசிகள் தேவ, சந்நியாசி, ரிஷி, மகரிஷி போன்ற வளர்ச்சியின் பல கட்டங்கள் கடந்து முழுதாய் திவ்வியப்பிரகாசத்தின் வெளிப்பாடான ஈஸ்வரனின் அல்லது அனைத்து பலம் வாய்ந்த குருவின் பதவிக்கு வருகிறது. மனித வாழ்க்கையின் வளர்ச்சியே நோக்கம். குரு என்ற வார்த்தையின் அர்த்தம் ‘கு’வும் ‘ரூ’வும் சேர்ந்தது. அதன் அர்த்தம் இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு செல்வது என்பதாகும். நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் மூலமாக இந்த வார்த்தை அதன் முழு அர்த்தத்தில் நிலை கொள்கிறது. உலகத்தின் ஒளியின் ஒளியாய் இருக்கும் நம் அன்பான குருவின் உறவுக்கு இடையில் வந்துள்ள ரகசியம் இது.
அன்னதானம், ஆதுரசேவனம், ஆத்மாபோதனம் இந்த மூன்று அடிப்படை விஷயங்கள் சாந்திகிரியின் சத்தியத்தின் குறியீடுகள் . சாந்திகிரி ஆஸ்ரமத்தின் அடிப்படை தத்துவ சாஸ்திரம் கடவுளின் வெளிப்பாடு மூலம் பெற்ற தெய்வீக கொள்கைகளின் வெளிப்பாடு. குருவின் வாழ்க்கை ஆன்மீகத்தின் அனைத்து மாற்றங்களையும் கடந்து ஒரு புதிய வெளிச்சமாக உயர்கிறது. குருவின் சஞ்சித புண்ணியத்தின் ஒவ்வொரு அணுவும் பிரதிஷ்டையின் ஜீவதாரமான உறுதியின் மூலம் வரும் போது அதன் சரித்திரம் மாறுகிறது. ஒரு நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஆன்மீக பரிமாற்றத்தின் ஆதாரம் அதன் பிரகாச கதிர்கள் உலகெங்கும் பிரதிபலிக்கிறது. குடும்பத்தின் தேசத்தின் முழு உலகத்தின் கர்ம உருவாக்கம். அந்த மாற்றம் தொடங்குவது இங்கேதான்.
ஆம், சாந்திகிரியின் வழி கடவுளின் வழி. இந்த பாதையில் உள்ள அதிர்ஷ்டம் கிடைத்த அருள்வாக்கு ஆத்மாக்களால் நாம் ஒவ்வொருவரும், குருவின் திவ்வியப்பிரகாசத்தில் இலயித்து, குருப்பிரகாச மஹத்வத்தில் பிரகடனமாகி வரும் மகாபிரகாசம் அபிவந்திய சிஷ்ய பூஜ்யத மூலம் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த திவ்வியப்பிரகாசத்தின் ஒருமித்த மனதால், குருவும் சிஷ்யனும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என்றும் மற்றும் எல்லாவிதத்திலும் முழுமை அடைவதாகும். அபிவந்திய சிஷ்யபூஜ்யத என்பது குருவின் மற்றும் சீடனின் உயர்ந்த நிலையில் இருந்து உடலெடுக்கும் வணக்க வழிபாடு. சாந்திகிரி ஆஸ்ரமத்தின் சாகேத் கிளையில் அபிவந்த்ய சிஷ்யபூஜிதயை இன்று பக்தர்கள் நமஸ்கரிக்கிறார்கள்.
சமாதானத்தின் பாதையின் மூலமும் சகிப்புத் தன்மையின் பாதையில் ஆதிகாலம் முதல் இன்றுவரை ஓரிடத்திலும் தெய்வீகத்திற்கு மாறாக எதுவும் நடக்கவில்லை என்று புரிந்து கொள்ளலாம். எப்போதெல்லாம் உலகில் தர்மத்தில் பிரச்சினை நடக்கிறதுவோ அப்போதெல்லாம் தீர்வு என்பது ஈஸ்வரன் செயல்படுத்துகிறது என்று நமக்குத் தெரியும். நிலையான ஒரு தெய்வீகம் அடிபணிந்து வளரும் சமூகம் அதுதான் சாந்திகிரியின் கர்மபாதத்தின் மூலம் இலக்காகிறது.
ஜாதி மத வர்ண வர்கங்கள்க்கு ஆதீதமாக மனிதன் என்ற ஏகஜீவ சித்தாந்தம், ஜன்ம ஜன்மாந்தர உறவுகளின் மூலம் ஜீவவாழ்வை பரிணமித்து புண்யார்ஜித பாதை தயார் செய்யும் உயிர் காப்பு. இது தான் சாந்திகிரி..
சாந்திகிரி ஆஸ்ரமம் சாகேத் கிளையில் நடைபெறும் குருவின் பிராணபிரதிஷ்டை விழாக்களுக்கும், சில்வர் ஜூபிலி கொண்டாட்டத்திற்கும் அனைவரரையும் வரவேற்கிறோம். குருகாருண்யம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

Related Articles

Back to top button