IndiaLatest

தமிழக கிராமங்களில் ஊர்மக்களின் ஆரோக்கிய நிலையை சாந்திகிரி சித்த மருத்துவ குழுவினர் கேட்டறிந்தனர்.

“Manju”

ன்னை: வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சாந்திகிரி ஆசிரமம் நடத்தும் சுகாதார புள்ளிவிவரக் கணக்கெடுப்பு இன்று 2வது நாளை எட்டியது. சித்த மருத்துவம் படிக்கும் வருங்கால மருத்துவர்கள் இங்கு ஒவ்வொருவரையும் அணுகுகிறார்கள். சாதாரண நோயாளி மருத்துவரைத் தேடி அலையும் போது, மருத்துவர் நோயாளியைத் தேடி அருகில் செல்கின்றார். தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் சித்த மருத்துவத் துறையின் வருங்கால வாக்குறுதி அது.. ஒவ்வொரு நோயாளியையும் எப்படி எதிர்கொள்வது, பல்வேறு நோய் நிலைகளையும் மற்றும் அவர்களின் சுற்றுப்புற சுகாதார நிலைமையைப் நேரில் கண்டு புரிந்துகொண்டு மருத்துவர் மாணவர்கள் . நேரடியாக கற்றுக் கொள்கிறார்கள். ஊர்மக்களுக்கு மருத்துவர் நேரில் வந்து கண்டு மருந்து கொடுப்பது என்பது தனி சந்தோஷம் தரக்கூடிய ஒன்றுதான். தமிழகத்தின் செய்யூர் கிராமப் பகுதிகளில் இரண்டு நாட்களாக இளம் மருத்துவர்கள் வெள்ளை உடையில் மக்களுக்கு இடையில் வலம் வருகின்றனர். திருவனந்தபுரம் போத்தன்கோட்டில் உள்ள சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 52 சித்த மருத்துவ மாணவர்களும், நான்கு பேராசிரியர்களும் இந்த மருத்துவ புள்ளி விவரக் கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.
நாளை நடைபெறும் மிகப்பெரிய இலவச சித்த மருத்துவ முகாமில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு மருந்தும் மற்றும் தொடர் சிகிச்சையும் கிடைக்கும். திரைப்பட நடிகர் திரு.தலைவாசல். விஜய் அவர்கள் முகாமை தொடங்கி வைக்கிறார்.

சித்தா முகாம், படங்கள் மூலம்

Related Articles

Back to top button