KeralaLatest

பௌர்ணமி தீபபிரதட்சணம் பக்தி மயம்: புகைப்படங்கள்

“Manju”

போத்தன்கோடு: சாந்திகிரி ஆசிரம சுழல் முழுவதும் கையிலேந்திய தீப தட்டுகளில் இருந்து மிளிரும் ஒளியில் தூய்மையான உடை அணிந்து விரத அனுஷ்டானங்களுடன் வலம் வந்த குருபக்தர்கள், புதன்கிழமை மாலை பெளர்ணமியையொட்டி நடந்த தீபபிரதட்சணத்தில் கலந்துகொண்டார்.

பக்தியின் நிறைவில் பக்தர்கள் பிரத்தியேகமான தட்டங்களில் தீபமேந்தி மாலை நேரத்தில் ஆசிரமம் வலம் வந்தனர். அகண்டநாம மந்திரங்களின் உச்சாடன சூழலில் தங்கள் மனதை குருபாதத்தில் அற்பித்தனர். பக்தர்களிடம் நின்று உயர்ந்த குருமந்திரம் அந்த சூழலில் பிரதிபலித்தது. தீப பிரதட்சிணத்திற்கு சந்நியாசி, சந்யாசினிமார்கள் தலைமை தாங்கினார்கள் .

‘பஞ்சவாத்யம்’, ‘நாதஸ்வரம்’ மற்றும் விவித வாத்திய உபகரணங்கள் உடன் அந்த தீபபிரதட்சணம் மேலும் அழகை கூட்டியது. சாந்திகிரியின் மத்திய ஆசிரமம் உள்ள போத்தன்கோடும் மற்றும் ஆசிரம கிளைகளிலும் பெளர்ணமியை ஒட்டி தீபபிரதட்சணம் நடந்தது.

பௌர்ணமி நாளில் பிரார்த்தனை சங்கல்பத்துடன் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமானம் வரை உபவாசம் அனுஷ்டிக்கும் பக்தர்களும் , மற்றும் இந்த நாளில் ஒரு முறை மட்டுமே உணவருந்தும் பழக்கம் உள்ளவர்களும் உண்டு.

மாணவர்களுக்கு பெளர்ணமி விரதம் கல்வி பலன் அளிக்க சிறப்புள்ளதாகும். இந்து மதத்தில் கடவுளின் விருப்பம் பெறுவதற்கு சிறப்பான ஒன்று பெளர்ணமி விரதம். தென் இந்தியாவில் இது ‘பூர்ணிமா’ என்றும் அறியப்படுகிறது. அன்றைய நாள் பிரார்த்தனையும் விரதம் அனுஷ்டிப்பதும் முன் பிறவி பாவங்களுக்கான தீர்வு என்று நம்பப்படுகிறது.

அனைத்து தெய்வ விருப்பங்களுக்கும் உத்தமம் பௌர்ணமி விரதம். சாந்திகிரியில் குரு வழிகாட்டுதலின்படி ஒவ்வொருவரும் பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

Related Articles

Back to top button