IndiaLatestThiruvananthapuram

இலங்கை சுகாதார அமைச்சர் சாந்திகிரி சுகாதார மையத்தை பார்வையிட்டார்

“Manju”

போத்தான்கோடு :  சாந்திகிரி ஆசிரமத்தில் நடைபெறும் நவபூஜிதம் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கெஹெலியா ரம்புக் சாந்திகிரி ஹெல்த்கேர் மண்டலத்தை பார்வையிட்டார். இலங்கை அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் மருந்து தொழிற்சாலை, மருத்துவ தோட்டம், சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை பார்வையிட்டனர். மேலும் சித்த மருத்துவக் கல்லூரியில் ஓணப் பண்டிகையைத் தொடங்கி வைத்தார். சித்த சிகிச்சைக்கு இலங்கை முக்கியத்துவம் கொடுக்கும் நாடு எனவும், தமது நாட்டில் சித்த வைத்தியர்கள் பலர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கேரளாவின் மிகப்பெரிய பண்டிகையான ஓணப் பண்டிகையை சித்த மருத்துவ மாணவர்களுடன் கொண்டாடிய மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தினார். பின்னர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் இலங்கை மாணவர்கள் கேரளாவில் BSMS படிக்க வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கல்லூரி முதல்வர் டாக்டர்.பி. ஹரிஹரன் அவர்களிடம் கேட்டறிந்தார். அத்தம் பூக்களம், திருவாதிரை ஆட்டம், கயிறு இழுத்தல் போட்டி ஆகியவை ஓணம் கொண்டாட்டத்திற்கு வண்ணம் சேர்த்தன. மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, ஓணத் திருவிருந்து அருந்திய பின் கல்லூரியிலிருந்து புறப்பட்டார். கொண்டாட்டத்தின் இனிமையை ருசிக்க மீண்டும் சாந்திகிரிக்கு வருவேன் என்றார்.

Related Articles

Back to top button