KeralaLatest

’காவோரம் வீதி – புழை ஒழுகும் திட்டம்’ வழியாக – சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி என்.எஸ்..எஸ்.பிரிவு மாணிக்கல் கிராம பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய நிகழ்வு.

“Manju”

சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவு சார்பாக மாணிக்கல் கிராம பஞ்சாயத்தின் ‘காவோரம் வீதி – புழை ஒழுகும் திட்டத்தின் மூலம் பிரிக்க முடியாத தொடர்பை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக ஓடையின் இருபுறமும் 75 மூலிகைச் செடிகள் இன்று (02.08.2023 புதன்கிழமை) நடப்பட்டன. சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வேளாவூர் மத்தநாடு கோவில் அருகே உள்ள ஓடையில் காலை 10.30 மணிக்கு துவங்கியது. மாணிக்கல் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் (தலைவர் நிதிப்பிரிவு அன்னல் வார்டு) எஸ்.லேகா குமாரி பேசுகையில் ‘காவோரம் வீதி – புழை ஒழுகும் திட்டம்’ மற்றும் சாந்திகிரி சித்த மருத்துவத்தின் என்.எஸ்.எஸ். பிரிவுடன் இணைந்து எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் இதற்குக் கல்லூரி அனைத்து வகையிலும் உதவி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார்.

நிகழ்ச்சிக்கு சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் சௌந்தர ராஜன் தலைமை வகித்தார். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவு ‘காவோரம் வீதி – புழை ஒழுகும் வழி’ திட்டத்திற்கு ஆதரவளித்தது குறித்து தலைவர் (சுகாதாரம் மற்றும் கல்வித்துறை) தைக்காடு வார்டு கே.சுரேஷ்குமார் மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டு உரையாற்றினார். அடுத்த ஆண்டுகளில் அதே செடியின் நாற்றுகளை மற்றொரு முறையில் நடுவதன் மூலம் சேதமடைந்த செடிகளை முன்னெடுத்துச் செல்லலாம் என துணைச் செயலாளர் எஸ்.சுஹாஸ் லால் தெளிவுபடுத்தினார். வேளாவூர் ஊராட்சி உறுப்பினர் ஆர்.விஜய குமாரி செடிகளை இரவு நேரங்களில் பாதுகாப்பது குறித்ததான கவலையைத் தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மாணிக்கல் கிராம பஞ்சாயத்து செயலாளர் ஜி.எல்.ஹரிகுமார் வாழ்த்துரை வழங்கினார். இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இதுபோன்ற திட்டம் தேவை என்பதை சுட்டிக்காட்டிய சாந்திகிரி வார்டு நலபணித் தலைவர் ஆர்.சஹீரத் பீவி நடப்பட்ட செடிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி வயதானவர்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு ஓய்வெடுக்க இருக்கைகளைத் தயாரிப்பதில் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவின் உதவியை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.. குன்னிடை வார்டு உறுப்பினர் எஸ்.சுதீஷ் மற்றும் கோலியாகோட் வார்டு உறுப்பினர் எல்.சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாணிக்கல் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பெரும்பாலான குடும்பஸ்ரீ பணியாளர்கள் 01.08.2023 செவ்வாய் மற்றும் 02.08.2023 புதன்கிழமைகளில் அச்சுற்றுபுரங்களில் செய்த முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கன.

மூலிகைகள் நடும் துவக்க விழா என்று கூறலாம். மாணிக்கல் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் (தலைவர் நிதித்துறை, அன்னல் வார்டு) எஸ்.லேகா குமாரி அசோக மரச் செடியையும் மற்றும் தலைவர் (சுகாதாரம் மற்றும் கல்வித் துறை) தைக்காடு வார்டு கே.சுரேஷ் குமார் வெள்ளை நிறப்பூக்கள் கொண்ட அருளிச் செடியையும் மாணிக்கல் கிராம ஊராட்சி செயலாளர் ஜி.எல்.ஹரிகுமார் சிவப்பு நிற அருளிச் செடியையும் வேளாவூர் ஊராட்சி உறுப்பினர் ஆர்.விஜய குமாரி மற்றும் நலப்பணித் தலைவர் ஆர்.சஹீரத் பீவி (சாந்திகிரி வார்டு) தனித் தனி அசோக மரச் செடியையும் நட்டது வித்தியாசமான காட்சியாக இருந்தது. குடும்பஸ்ரீ பணியாளர்கள், கல்லூரியின் 18வது பேட்ச், 19வது பேட்ச் மாணவ மாணவியர் பல்வேறு மூலிகை செடிகளை நட்டு ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு கரிம்குறிஞ்சி, அசோகாம், சமுத்திரபச்சை, கீரிபூண்டு, புங்கு, முக்கண்ணன்பேர் போன்ற மருத்துவ செடிகள் வழங்கப்பட்டன. 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இத்தகைய முயற்சியின் நோக்கத்தை விளக்கி குணபாடம் மருந்தியல் துறை துணைப் பேராசிரியர் வி.ரஞ்சிதா(மருத்துவ தாவரவியல் பிரிவு) வரவேற்றார். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவு திட்ட பொறுப்பாளர் பேராசிரியர் என்.ஷீஜா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்களான குணபாடம் மருந்தியல் துறை சார்-பொறுப்பு முனைவர் ஈடல் ஷைனி, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எல்.சிவவெங்கடேஸ், குணபாடம் மருந்தியல் துறை (மருத்துவ தாவரவியல் பிரிவு) உதவிப் பேராசிரியர் பி.பி.சிந்து, உடல்தத்துவம் துறை உதவிப் பேராசிரியை டாக்டர் ஜே.எம்.ஜெயஸ்ரீ , உடல்தத்துவத் துறை ஆய்வுக்கூடப் பணியாளர் ஜி.மஞ்சுளா, அலுவலக நிர்வாகி வி.ஆர்.தீபா, கல்லூரியின் 18வது பேட்ச் 19வது பேட்ச் மாணவர்கள், மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்து குடும்பஸ்ரிகள் மற்றும் சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மூலிகைத் தோட்டப் பணியாளர்களான டி.விஜயன், ஆர்.திவாகரன், புஷ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரியின் என்.எஸ்.எஸ் பிரிவு திட்ட பொறுப்பாளர் பேராசிரியை என்.ஷீஜா இது போன்ற நிகழ்வுகள் மருத்துவச் செடிகள் பராமரிப்பிற்கு உகந்தது என விளக்கினார்.

Related Articles

Back to top button