LatestThiruvananthapuram

மனித ஒற்றுமைக்கு நவஜோதிஸ்ரீ கருணாகர குருவின் ஆழ்நிலை தரிசனங்கள் அவசியம் – ராம்நாத் கோவிந்

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்): நவஜோதி ஸ்ரீ கருணாகர குருவின் போதனைகள் ஆன்மிகம் மற்றும் மனித ஒற்றுமையில் கவனம் செலுத்துவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் கூறினார். சாந்திகிரி ஆசிரமத்தின் 97வது நவபூஜித விழாவை இன்று துவக்கி வைத்து அவர் பேசினார். நவஜோதி ஸ்ரீ கருணாகர குரு உலகிற்கு அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மகாகுரு ஆவார். குரு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக மறுமலர்ச்சியின் மையத்தை தனது வாழ்க்கையின் உணர்த்தினார்.

அவரது ஆன்மீக வழிகாட்டுதலின் தொடர்ச்சியாக குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அமிர்த ஞான தபஸ்வினி மூலம் குரு வழங்கிய அறிவுரைகளையும் போதனைகளையும் பெற சாத்தியமாகும். குருவின் அனைத்து வழிகளும் எதிர்கால சந்ததியினருக்கு வெளிச்சமாக இருக்கும் என்றும், புனித சிஷ்யபூஜிதாவை தரிசித்தபோது ஆழ்ந்த ஆன்மீக உணர்வு ஏற்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
கேரள உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாண்புமிகு கேரள ஆளுநர் ஸ்ரீ ஆரிப் முஹம்மது கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். ‘வார்த்தைகள் சத்தியம், சத்தியமே குரு, குருவே கடவுள்’ என்ற குருவின் கூற்றை நிறைவேற்றும் மையமாக சாந்திகிரி ஆசிரமம் திகழ்கிறது என்று ஆளுநர் கூறினார். மலையாளத்தில் தொடக்க உரையின் போது, அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விகேஎல்-அல்நமல் குழுமத்தின் தலைவர் டாக்டர் வர்கீஸ் குரியன் இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். கூட்டத்தில் நவபூஜிதம் நினைவு மலரும் வெளியிடப்பட்டது.

சாந்திகிரி வித்யா பவன் கேரளாவின் முதல் செயற்கை நுண்ணறிவு உயர் தொழில்நுட்ப பள்ளியாகவும், 100 மாணவர்களுக்கு இலவச சிவில் சர்வீஸ் பயிற்சி பற்றிய அறிவிப்பும் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். வேதிக் அகாடமி முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு ஓணகோடியை (சம்பிரதாய ஓணம் உடை) வழங்கியது.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலர் சுவாமி குருரெத்தினம் ஞான தபஸ்வி, இயக்குநர் சுவாமி நவநன்ம ஞான தபஸ்வி, மணிக்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் குதிரைக்குளம் ஜெயன், எம்ஜி பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாபு செபாஸ்டியன், சிந்தூரம் தொண்டு நிறுவனங்களின் தலைவர் சபீர் திருமலா. டாக்டர் கே.என். ஷியாம பிரசாத், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொருளாளர் எம்.பாலமுரளி, தேசிய சிறுபான்மை ஆணையக் குழு உறுப்பினர் ஜார்ஜ் செபாஸ்டியன், டாக்டர் பி.ஏ. ஹேமலதா உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் காலை 9 மணிக்கு ஆசிரமத்திற்கு வந்து, தாமரை பர்ணசாலாவில் மலர்களை அர்ப்பணித்த பிறகு, வணக்கத்திற்கு உரிய அமிர்தா ஞான தபஸ்வினியுடன் சந்திப்பு நடந்தது. பிறகு கூட்டம் முடிந்து டெல்லி திரும்பினார்.

Related Articles

Back to top button