Uncategorized

சிஷ்யபூஜிதாவை வரவேற்க தயாராகும் பர்ணாசாலை; ஆதிவாசிகள் கைவண்ணத்தில்

“Manju”

சுல்தான் பத்தேரி: நாட்கள் நகர நகர தன் பொலிவை கூடுதல் வெளிக்கொணரும் முயற்சியில் நம்பியார் குன்றில் உள்ள சாந்திகிரி ஆசிரமம் தயாராகி வருகிறது. பனிமூட்டம் மாறி ஒளி படத்துவங்கும் முன் குரு பக்தர்கள் வந்து சேரவும் துறவிகள் விருப்பத்திற்கிணங்க தம்மை அங்குள்ள வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட துவங்குகின்றனர். மாலை ஆனதும் தங்களது பணிகளை குரு பாதத்தில் நிறை மனதுடன் சமர்ப்பித்து தமது இல்லங்களுக்கு திரும்புகின்றனர். இவர்களுடன் மத்திய ஆசிரமத்திலிருந்து வந்துள்ள பல்வேறு துறை சார்ந்த தொண்டர்களும் சேர்ந்து சேவை செய்யும் கண்கொள்ளாக் காட்சி குரு ஸ்தானிய சிஷ்யபூஜிதாவை வரவேற்க தயாராகிறது என்பது திண்ணம். குருவின் பாத பரிசத்தால் புனிதமான இந்த மண்ணில் சிஷ்யபூஜிதா வருவது ஆசிரம சரித்திரத்தில் மற்றுமொரு அத்தியாயம் ஆகும்.

பத்தேரியில் வரும் வேளையில் எல்லாம் குரு தங்கியிருந்த பர்ணாசாலை அதே பொலிவில் புதுப்பிக்கப்படும். ஆதிவாசி பெண்கள் ஒரு பிரிவினர் தங்களது கைவண்ணத்தில் இந்த வேலைகள் நடைபெறவுள்ளது. முற்றிலும் பாரம்பரிய மற்றும் இயற்கையுடன் இணைந்து மேற்கொள்ள தயாராகி வருகிறது. மண்ணால் கட்டப்பட்ட பர்ணாசாலையில் உள்ள வெடிப்பு மண் மற்றும் உமியை புளியமரம் பட்டை ஊற வைத்த நீரில் கலந்து அந்த கலவையை கைகளால் பூசி மெழுகி சரி செய்கின்றனர். கூரையில் உள்ள ஓடுகள் இறக்கி சுத்தம் செய்து மீண்டும் அதை வேய்கின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருபவர்களுக்கும் குரு உபயோகித்த பொருட்கள் காண்பதற்கும் மற்றும் ஆசிரம சரித்திரம் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் வகையில் புதுப்பிக்கப்படுகிறது. நவஜோதி ஸ்ரீகருணாகர குருவின் ஓவ்வொரு வருகையிலும் ஆன்மீகத்தின் புதிய வரலாறு எழுதிய பகுதி பத்தேரி. இப்போது குருஸ்தானியை வரவேற்பதில் பத்தேரி ஒருங்கே தயாராகி வருகிறது.

Related Articles

Back to top button