LatestThiruvananthapuram

ஆனந்தத்தின் மிகப் பெரிய கர்ம பூமியும் புண்ணிய பூமியும் சாந்திகிரி ; கும்மனம் ராஜசேகரன், முன்னாள் மிசோரம் ஆளுநர்

“Manju”

போத்தன்கோடு (திருவனந்தபுரம்) : ஆனந்தத்தின் மிகப் பெரிய கர்ம பூமியும் புண்ணிய பூமியும் சாந்திகிரியென்றும், சாந்திகிரியை வழிநடத்தும் அனுபவமான அனுபவத்தை நாம் காணவும் கேட்கவும் ஸ்பர்சிக்கவும் முடியும்., மேலும் இது நாம் அனைவரும் இதயத்தால் அனுபவிக்கிறோம் என்று முன்னாள் மிசோராம் ஆளுநர் கும்மணன் ராஜசேகரன் குறிப்பிட்டார். குருவை அறிய பணமல்ல மாறாக நல்ல உள்ளம் மட்டும் வேண்டும். சாந்திகிரி ஆசிரமத்தில் நவஒலி ஜோதிர் தினத்தையொட்டி நடைபெற்ற பிரதிநிதி மாநாட்டை தொடங்கி வைத்து போது அவர் குறிப்பிட்டார் . ஆனந்தத்தின் மிகப் பெரிய கர்ம பூமியும் புண்ணிய பூமியும் சாந்திகிரி விளங்குகிறது என்றும், குருவை நேரடியாகக் காண்பதற்கும் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கும் தம் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். தீவிரமான பிரச்சனைகள் நிறைந்த இன்றைய சூழலில் வாழும் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான ஒளிச்சுடர் ஆக மகாகுரு நிற்கிறார். மனித இதயங்களில் மாற்றத்தின் ஒருபோதும் அணையாத தீபமும் வெளிச்சமும் ஆகிய குரு நம்மை முன்னோக்கி வழி நடத்துகிறார். உணவுக்கும் தண்ணீருக்கும் அல்ல நாம் தாகம் கொள்ள வேண்டியது மாறாக குருவின் கிருபை மற்றும் அருளுக்கும் தான். அதில் இருந்தும் கிடைக்கும் ஞானத்தின்படி குரு நம் கூடவே இருக்கும் போது குருவே என்னை காப்பாற்ற வேண்டும் என்ற பிரார்த்தனைக்கு அர்த்தம் இல்லை, அது குருவில் நமக்கு சந்தேகம் இருக்கிறது என்று தோன்றும்.

குரு காருண்யம், அரவனைப்பும், நேசமும், தயவும், நம்மிடையே உள்ள போது நமக்கு ஏன் சந்தேகம். குருவின் மீது நம்பிக்கை அது அனுபவமாக , அந்த அனுபூதிதான் காருண்யமாகும். இந்திரியங்களுக்கு அப்பாற்பட்டு நம் இதயம் இருக்க வேண்டும். குருவின் மீது நேசம் தூய்மை மற்றும் ஆத்மார்த்தமாகவும் இருக்கும் போது அது நிவர்த்தியாகவும் இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கப்பட்ட பிரதிநிதி மாநாட்டிற்கு ஆசிரமம் ஆலோசனைக் குழு அட்வைசர் ஜெயபிரகாஷ் எ. வரவேற்பு உரையாற்றினார். ஆசிரமம் உப தலைவர் ஸ்வாமி நிர்மோஹத்ம ஞானதபஸ்வி தலைமை தாங்கினார். காலை 9.30 மணிக்கு ஆசிரமத்தை அடைந்த கும்மணம் ராஜசேகரன் அவர்களை சுவாமி சாயுஜ்யநாத் ஞானதபஸ்வி, பொது நிர்வாக இன்சார்ஜ் சுவாமி ஜோதிர்பிரப ஞானதபஸ்வி ஆகியோர் வரவேற்றனர். சககரண மந்திரத்தில் ( கூட்டுறவு கோயில்) குருவின் முன் அவர் பிரார்த்தனையில் பூரணமாக ஆழ்ந்தார்.

 

 

 

Related Articles

Back to top button