IndiaLatest

ஆன்மிக சரித்திரம் படைக்க குருவின் புனித பயணம்: மக்வானா குடும்பத்திற்கு இன்று ஆசீர்வதிக்கப்பட்ட நாள்

“Manju”

சென்னை: சென்னை விமான நிலையம். நேரம் மதியம் 1.30. மணி அளவில் இண்டிகோ விமானத்தில் இருந்து தூய வஸ்திரம் தரித்த சந்நியாசி, சந்நியாசினிகள் மற்றும் வெண்ணாடையணிந்த குரு பக்தர்களுடன் வருகை தந்த குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவை விமான நிலையத்தில் இருந்தவர்கள் அனைவரும் கண்ணிமைக்காமல் கண்டு நின்றனர். சிலர் கைகூப்பி தொழுதபடி நின்றனர். மற்றும் சிலர் அவரின் ஒளி முகப்பொழிவைக் கண்டு பிரமித்து நின்றனர். அவர் மெதுவாக நடந்து ஓய்வு அறையை அடைந்த நேரத்தில், இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை, பொது மேலாளர் கே.கே. ஷோபி மற்றும் கேரள அரசின் பிரதிநிதி அனு.பி. சாக்கோ மற்றும் டாக்டர் ஜி. ஆர். கிரண் ஆகியோர் பூங்கொத்துகளைக் கொடுத்து வரவேற்றனர். பின் சிறிது நேரம் ஓய்வறையில் ஓய்வெடுத்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறினார்.

நுழைவாயிலில் சுவாமி மனுசித் ஞான தபஸ்வி மற்றும் சென்னையிலுள்ள குருபக்தர்கள் பிரார்த்தனையுடன் காத்திருந்தனர். திராவிட மண்ணில் முதன்முறையாக குரு வருகை தந்திருக்கிறார். பூங்கொத்துகள் கொடுத்தும், மனதார பிரார்த்தனை செய்தும் குருவை வரவேற்றனர். நிறைவான குரு நாமமந்திர ஒளி முழங்கிய சூழலில் அமோக வரவேற்பைப் பெற்ற பிறகு குருஸ்தானியா அண்ணாநகருக்குப் புறப்பட்டார்.


தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் சென்னை மாநகரில் குருவின் வாகன அணிவகுப்பு மெதுவாக நகர்ந்தது. பாரம்பரியமும் கலாச்சாரமும் பின்னிப் பிணைந்த நகரத்தின் வழியாக பாரதத்தின் ஆன்மீக ஒளியை உட் கொண்டு மகாகுருவின் முதல் சீடரின் புனிதப் பயணம் இது. ஒவ்வொரு யாத்திரையும் தெய்வீக உறுதியை உணர்த்துவதாகும்.

குருவின் ஆசியுடன் வீட்டிற்குள் நுழையக் காத்திருந்த ஜோதி மக்வானாவின் குடும்பத்திற்கு இன்று ஒரு ஆசீர்வாதமான நாள். குருவின் வாகன அணிவகுப்பு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மெட்ரோ மண்டல கோபுரத்தை வந்தடைந்தபோது, குடும்பத்தினரின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது. பிரார்த்தனையுடன் தலை வணங்கி குருவைப் வரவேற்றனர். குருவின் ஓய்வு அறை வீட்டின் 10-வது மாடியில் இருந்ததால் அவரை அங்கு அழைத்துச் செல்வதை எண்ணும்பொழுது வாழ்க்கையின் சங்கடம் நிறைந்த தருணமாக உள்ளது. பூஜை அறையில் விளக்கேற்றிய பின் நேராக சமையலறைக்குப் பொற்பாதங்களை அடியெடுத்து வைக்கிறார். குருஸ்தானியருடன் ஜனனி நிர்மலா ஞான தபஸ்வினி, ஜனனி ரிஷிரத்தினா ஞான தபஸ்வினி, ஜனனி திவ்ய ஞான தபஸ்வினி ஆகியோர் பால்குட நிகழ்ச்சிக்கு உடன் சென்றனர்.

மெட்ரோசோன் டவர்ஸின் பிளாட் எண். 44 இல் குரு மந்திரங்கள் முழங்கின. சன்னியாசிகள் வழிபாடு மற்றும் பிரார்த்தனைக் வழிபாடுகளை நடத்தினர். குடும்ப உறுப்பினர்கள் குருவுக்கு ஹாரம் மற்றும் தட்டத்தை சமர்ப்பணம் செய்தனர். விழா முடிந்ததும் குருஸ்தானியா குடும்ப உறுப்பினர்களிடம் பேசினார். சாகர் மக்வானா குருவை நாளை தங்கள் தொழிற்சாலைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இன்று ஓய்வெடுத்த பிறகு, யாத்திரைக் குழுவினர் நாளை செய்யூர் ஆசிரமம் செல்கின்றனர். செய்யூர் சரித்திரமாக மாற்றம் பெற தயாராகிறது….

Related Articles

Back to top button