LatestThiruvananthapuram

கண்ணூர் பகுதியில் கலாச்சார சங்கமம் நடந்தது

“Manju”

கண்ணூர்: பூஜித பீட சமர்ப்பண ஆண்டு விழாவை முன்னிட்டு கண்ணூர் பகுதி சாந்திகிரி ஆசிரமத்தில் திங்கள்கிழமை (05-02-2024) மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற கலாச்சார சங்கமத்தில் ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி சிறப்புரையாற்றினார்.

சாந்திகிரி இயக்கத்தில் சேவை புரிபவர்கள் ஒருவருக்கு ஒருவர் தான் என்ற அகந்தை இல்லாமல் அன்புடனும் மரியாதையுடனும் ஒற்றுமையுடனும் பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் குருவின் அன்பையும், சிந்தனைகளையும் குழந்தைகளுக்குப் புகட்டி முறையான பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுவாமி கூறினார்.

ஏரியா பொறுப்பாளர் சுவாமி ஆத்மபோத ஞான தபஸ்வி தலைமை வகித்தார். ஏ.ராஜீவன் வரவேற்றுப் பேசினார். பி.ராஜீவன் நன்றியுரையாற்றினார்.
மனோஜ் மாத்தன், புஷ்பா பிரேமன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். ஆசிரம ஆலோசனைக்குழு பொறுப்பாளர்கள் ஆட்சிக்குழு, கண்காணிப்புக்குழு, கலாச்சார பிரிவுகளின் ஏரியா குழு, ஆசிரம கிளை ஒருங்கிணைப்புக்குழு மற்றும் உறவினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கண்ணூர் பகுதியில் சாந்திகிரி பப்படம்(அப்பளம்) விநியோகம் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி துவங்கி வைத்தார்.

கண்ணூர் பகுதியில் சாந்திகிரி பப்படம்(அப்பளம்) விநியோகம் சுவாமி சைதன்ய ஞானதபஸ்வி துவங்கி வைத்தார்.

Related Articles

Back to top button