KeralaLatest

உடலும் மனதும் ஒருங்கிணைந்ததே யோக- ஸ்வாமி குருரத்னம் ஞான தபஸ்வி

“Manju”

போத்தன்கோடு : பரபரப்பான வாழ்க்கை கடந்து செல்லும் மனிதனின் உடல்-உள கூறுகளை புரிந்து உடலையும் மனதையும் ஒருமைப் படுத்துவது யோகா என்று சாந்திகிரி ஆஸ்ரமத்தின் பொதுச் செயலாளர் சுவாமி குருரத்னம் ஞான தபஸ்வி. சர்வதேச யோகதினத்தின் பகுதியாக போத்தன்கோட்டில் நடந்த யோகதின நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து பேசினார் சுவாமி. யோகா என்ற அறிவியலை உலகளவில் ஆக்குவதில் பிரதமர் வகிக்கும் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது . யோகம் என்பது சாதாரணமான உடற்பயிற்சி மட்டுமல்ல, மாறாக இயற்கையும் உலகமும் ஒன்றான மானிடத்தின் புத்துணர்வும் என்பதன் பதிலாக யோக உள்ளது. பாரதத்தின் தொன்மை வாய்ந்த பாரம்பரியத்தின் விலைமதிக்க முடியாத பங்களிப்பு யோகாயென்று சுவாமி கூறினார். மூத்த யோக ஆசிரியர் என்.கே. விமலாவை விழாவில் கௌரவித்தார் . சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி பிரின்சிபால் டாக்டர் .டி.கே.சௌந்தராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பாரதீய ஜனதா கட்சி திருவனந்தபுரம் மாவட்ட பொருளாளர் எம். பாலமுரளி, பேராசிரியர். டாக்டர் .ஜெ. நினப்ரியா, உடல் கல்வி இயக்குனர் பினோத்.கே, என்.எஸ்.எஸ். திட்ட அலுவலகர் ஷீஜா .என், வர்மம் துறை இணை பேராசிரியர் டாக்டர் .எ.ஜென்னிபர் லென்சி, உதவி பேராசிரியர்கள் ரஜ்னிதா.வி, டாக்டர் .பிரகாஷ்.எஸ்.எல், டாக்டர் .வனிதா.எம், டாக்டர். கவிதா. ஜி, டாக்டர் .கலைசெல்வி பாலகிருஷ்ணன், டாக்டர் . எல். சிவவெங்கடேஷ் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

யோகதினத்தின் பாகாமாக சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும், தன்னார்வ அமைப்புகளின் தொண்டர்களும் காலை 6.30 மணி அளவில் போத்தான்கோட் கிரிபால்ட்டன் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் யோகா நடத்தினர். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் யோக பொது நடைமுறைப்படி இது நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களும் இதன் பாகமாக யோக நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

Related Articles

Back to top button