IndiaLatest

புது டெல்லியில் சாந்திகிரி ஆசிரம வெள்ளி விழா மையம்- உப  ஜனாதிபதி  ஜகதீப் தங்கர்  20ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு

17ம் தேதி டெல்லி  துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விழா துவக்கம்

“Manju”

புது டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள சாகேத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சாந்திகிரி ஆசிரமத்தின் வெள்ளி விழா மையத்தை நவம்பர் 20ம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விழாவுக்கு அனில் ஜெயின் எம்.பி தலைமை தாங்குகிறார், சசி தரூர் எம்.பி சிறப்புரை ஆற்றுகிறார். கோகுலம் குழும தலைவர் கோகுலம் கோபாலன் பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்ய ஞான தபஸ்வி, பொதுச் செயலாளர் சுவாமி குருரத்தினம் ஞான தபஸ்வி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

12,000 சதுர அடி பரப்பு  கொண்ட வெள்ளி விழா மந்திரத்தின்  கீழ் தளத்தில் பிரார்த்தனை கூடம், முதல் தளத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், இரண்டாவது தளத்தில் யோகா ஆரோக்கியம் மற்றும் மூன்றாவது தளத்தில் ஒருங்கிணைந்த ஆயுஷ் சிகிச்சை மையம் என செயல்பட  உள்ளது.

Press meet at New Delhi

नई दिल्ली में प्रेस कॉन्फ्रेंस सेதேசிய தலைநகரில் உள்ள சாந்திகிரி ஆசிரமத்தின் 25 வருட செயல்பாடுகள்

அதன் நிறைவின் ஒரு பகுதியாக பரந்த அளவிலான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டு வெள்ளி விழா கொண்டாட்டங்களை நவம்பர் 17 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தொடங்கி வைக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் முன்னிலை வகிப்பார். டாக்டர் மகேஷ் சர்மா எம்.பி., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகாடமியின் தலைவர் சந்தீப் மார்வா, அகில இந்திய மலையாளி சங்கத்தின் தேசிய தலைவர் பாபு பணிக்கர், அரசியல் பார்வையாளரும், பிளாகு கம்யூனிகேஷன்ஸ்   நிர்வாக இயக்குனருமான பி.கே.தீபு நம்பியார். , மத்திய கிழக்கு பல்கலைக்கழக டீன் டாக்டர் ஜி.ஆர்.கிரண், ஜனனி ஷாலினி ஞான் தபஸ்வினி, டெல்லி மலையாளி சங்கத் தலைவர் ரகுநாத் கே., புஷாவிஹார் தர்மசாலா பொதுச் செயலாளர் எம்.பி.சுரேஷ், ஆசிரம ஆலோசனைக் குழு தகவல் தொடர்பு பிரிவு ஆலோசகர் சபீர் திருமலா ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

”இந்தியாவின் அறிவுப் பாரம்பரியம் – தர்மம் மற்றும் சாந்திகிரி இயக்கம்” என்ற தலைப்பில் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம்  மற்றும்  டெல்லி ஜவர்லால் நேரு  பல்கலைக்கழகத்துடன்   இணைந்து சாந்திகிரி  ஆசிரமம்  நடத்தும்  இரண்டு நாள் கருத்தரங்கு நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. டாக்டர் பத்மவிபூஷன் சோனல் மான்சிங் கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சீனிவாச வரகேடி, குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். நீரஜ் குப்தா, முன்னாள் எம்பி பேராசிரியர் பத்மபூஷன் மிருணாள் மிரி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வி, கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி துறை பேராசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை, வெள்ளி விழா மந்திரில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா அமிர்த ஞான தபஸ்வினி விளக்கேற்றுவார். நவம்பர் 16ம் தேதி மாலை 3 மணிக்கு டெல்லி வரும் சிஷ்ய பூஜிதாவை விமான நிலையத்தில் துறவிகள் மற்றும் குருபக்தர்கள் வரவேற்கின்றனர். டெல்லி யாத்திரையில் சிஷ்ய பூஜிதாவுடன் துறவிகள், சன்யாசினிகள், பிரம்மச்சாரிகள் என 300 பேர் வருகின்றனர்.

சிஷ்ய பூஜிதா என்பது சாந்திகிரி ஆசிரமத்தின் ஆன்மிக விஷயங்களின்  மொழி  மற்றும் வழி ஆவார். மிக அரிதான சில சந்தர்ப்பங்களில் மட்டுமே , சிஷ்யபூஜிதா திருவனந்தபுரம் போத்தன்கோடு  ஆசிரமத்திலிருந்து மிக முக்கியமான யாத்திரைகள்   மேற்கொள்வது வழக்கம். 14 வருட இடைவெளிக்குப் பிறகு, குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா, புது தில்லியில் உள்ள சாகேத் புஷ்பவிஹாரில் உள்ள ஆசிரமத்திற்கு யாத்திரை  மேற்கொள்வது, இது இரண்டாவது முறையாகும்.

நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பூஜை மண்டபத்தில்  பிரதிஷ்டாகர்மம்  நடைபெறும். சங்கல்பங்களுடன்  மனதையும் உடலையும் அர்ப்பணித்த நூற்றுக்கணக்கான ஆன்மிக  அன்பர்களின்  அகண்ட நாம  பிரார்த்தனை மற்றும் பக்தி  நிறைந்த சூழலில் இது  நடைபெறுகிறது. சாந்திகிரி, சாகேத்தில் உள்ள வெள்ளி விழா மையம் உலக அமைதிக்கான பிரார்த்தனை மையமாக இருக்கும், இங்கு ஜாதி, மதம், மொழி  மற்றும் நிறம்  என எவ்வித பாகுபாடின்றி அனைவரும்  ஒன்றாக இணைந்து  செயல்படும் வழிபாட்டு தலமாக இது விளங்கும்.

நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அரசியல், சமூக, கலாசார, ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். மாலை 6 மணிக்கு தீபபிரதட்சிணை நடைபெறும். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,புனித யாத்திரையின்  சத்சங்கமும் , பியூஷன்  இசை  மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தினசரி 90 மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அரங்கேற்றப்படும்.

1998 ஆம் ஆண்டு டெல்லியில் சாந்திகிரி ஆசிரமம் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. நான்கு குருபக்த நண்பர்கள் ஆரம்பித்த பணி,  ஒரு சமுதாயமாக  உருவாகவும், ஆயுர்வேத சித்த மருத்துவமனையை நிறுவவும் வழி வகுத்தது. தெற்கு டெல்லியில் 2002ல்  ஒதுக்கப்பட்ட நிலத்தில் வெள்ளி விழா மந்திரம்   கட்டபட்டுள்ளது. ஆசிரமத்தின் நெருங்கிய அன்பராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் விருப்பமும் வெள்ளி விழா மையம் அர்ப்பணிப்புடன் நிறைவேறுகிறது.

2009 இல், குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவின் புனித யாத்திரையின் ஒருபாகமாக  தில்லியில்  சாந்திகிரி ஆசிரமம் தனது செயல்பாடுகளில்   மிகவும் கவனம் கொண்டது. கடந்த பதினான்கு ஆண்டுகளில், ஆயுர்வேதம், சித்தா, யோகா, தொழில் திறன்கள், பெண்கள் முன்னேற்றம்  போன்ற பல்வேறு துறைகளில் ஆசிரமத்தின் செயல்பாடுகள் வட இந்தியா முழுவதும் பரவியுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குரு பக்தர்கள் ஒருங்கே  குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவை வரவேற்க தயாராக, டெல்லி உபாஸ்ரமத்தில் எல்லாவித   ஏற்பாடுகளும்  தொடங்கப்பட்டுள்ளதாகவும் மற்றும்  10,000க்கும் மேற்பட்ட அன்னதானம் வழங்கப்பட உள்ள்தாகவும் சுவாமி பக்ததன் ஞான தபஸ்வி செய்தியாளர்கள்  சந்திப்பில் தெரிவித்தார். டாக்டர்.ஜி.ஆர் கிரண், டாக்டர். கிரண் எஸ்., ரஞ்சித் தேவராஜ், அர்ச்சனா தேவராஜ் ஆகியோர் செய்தியாளர்கள்  சந்திப்பில் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button